கருத்து சுதந்திரம் என்பது பொய் செய்திகளை பரப்புவதிலோ சட்டம் அனுமதி அளித்த எல்லைகளை மீறுவதோ இல்லை என்று பலருக்கு புரிவதில்லை குறிப்பாக பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு என்று பல்வேறு கய்ட்லைன்ஸ் அதற்குரிய ஒழுங்கு பாட்டு துறையால் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க தனியார் பொழுது போக்கு தொலைக்காட்சியில் திட்டமிட்டு காட்சி ஒன்று பிரதமர் மோடிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக வடிவமைக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, சிறு குழந்தைகளை பயன்படுத்தி நகைச்சுவை என்ற ரீதியில் பொய்யை பரப்பி வசமாக சிக்கியுள்ளனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள்.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இதனை குழந்தைகள் இளைஞர்கள் நடுத்தர வயதுடையோர் என பலர் பார்வையிட்டு வருகின்றனர் பொழுது போக்கு நிகழ்ச்சியான இதில் அரசியல் சார்ந்த செயல்களும் இடம்பெற்று இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டதன் பயன்களை மறைத்து அதனை அப்படியே முட்டாள் தனம் என நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர்.
மேலோட்டமாக நகைச்சுவையாக தெரிந்தாலும் இது அரசியல் சார்பற்ற பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது, இந்த வீடியோவை திமுக எம்.பி செந்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் பகிர்ந்து அரசியல் ரீதியாக கொண்டு சென்றனர், இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்ப சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்தவும் மேலும் நிகழ்ச்சியை வழங்கிய நபரை நீக்கவும் நேற்றைய தினமே முடிவுகள் எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சூழலில் இதனை கருத்து சுதந்திரம் என்றும், சிறு குழந்தைகள் செய்துவிட்டார்கள் என்ற ரீதியில் முன்பு வீடியோவை பகிர்ந்து கொண்டாடியவர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர், இந்த சூழலில் மதுரையை சேர்ந்த எழுத்தாளர் K.K தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார் அதில்.,
கரு. பழனியப்பனை காப்பாற்ற ZeeTamil விவகாரத்தை சின்ன பசங்க விவகாரம் என்று திசை திருப்பினால்...முக ஸ்டாலின், உதைநிதி, அணில் பாலாஜி, சோடி மணி, தர்மபுரி முட்டை போண்டா என அனைவரையும் எனது 5 வயது மகனை வைத்து கிழித்து தொங்க விட்டு வீடியோ போடுவேன் பரவா யில்லையா.?
நான் வீட்டில் இல்லாத போது (5-7-2021) அன்று அதிகாலை 4 மணிக்கு போலீஸை அனுப்பி என் வீட்டு சுவர் ஏறி குதித்து, என் வீட்டுக்குள் அத்து மீறி உள்ளே புகுந்து, என் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் அராஜகத்தை அரங்கேற்றிய திமுக ZeeTamil விவகாரத்தில் கருத்துரிமை பற்றி பேசுவதா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆமாம் தினகரன் பத்திரிகை அலுவலகத்தையே கொளுத்திய நபர்கள் கருத்து சுதந்திரம் குறித்து பேசுவது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் பத்திரிகை துறையில் நமக்கு நெருக்கமான சிலர்.