
சில நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கை என்.ஏ.ஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ போலீஸார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த தாக்குதலுக்கும் போதை பொருள் கடத்தல்காரர்களுக்கும் சம்பந்தம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை என்.ஏ.ஐ கூறியுள்ளது.இது ஒட்டு மொத்த இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.
ஏனென்றால் கடந்த ஆண்டு டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க. வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. ஜாபர் அதனை தொடர்ந்து ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டான்.மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர் இது குறித்து என்.ஏ.ஐ உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இது வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறியதாதாவது: பஹல்காம் தாக்குதலுக்கும், ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதலுக்கும் தொடர்பு உள்ளது. இந்தத் தீவிரவாதத் திட்டங்களை அரங்கேற்றுவது லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்புதான். அந்த அமைப்புதான் இந்தியாவுக்குள் குஜராத் வழியாக போதைப் பொருட்களை கடத்தி, இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது.தொடர்ந்து கடத்தல்களை கடற்படையினர் முறியடித்து வருகிறார்கள்.
மேலும் போதைப் பொருட்களை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மூலம், தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றுவது எல்இடி தீவிரவாத அமைப்பின் சதித்திட்டமாகும்.இதன்மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த அந்த அமைப்பு முயல்கிறது. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பஹல்காமில் தீவிரவாதிகள் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தி உள்ளார்கள் என்பதை அறிவீர்கள்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் ஆசாமியின் மூலம், பாகிஸ்தானின் ஐஏஎஸ் உதவியுடன் இந்த போதைப்பொருள் கடத்தப்படடுள்ளது. ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த 2,988.2 கிலோ எடையுள்ள போதைப்பொருள், டால்கம் பவுடர் என்ற பெயரில் கடத்தப்பட்டுள்ளது.இதிலிருந்து கிடைக்கும் பணம் மூலம் தீவிரவாதத் திட்டங்களை அவர்கள் செயல்படுத்துகின்றனர். இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் சர்வதேச கடல்சார் எல்லை கோடு அருகே பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் போதைப் பொருட்களுடன் வருவதாக உளவுத்துறை தகவல் அளித்தது.அதன் அடிப்படையில், அந்த பகுதியில் கடலோர காவல்படையும், குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவும் இணைந்து கப்பலில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன. கடத்தல்கார்கள் படகில் இருந்த போதைப் பொருள் மூட்டைகளை கடலுக்குள் வீசிவிட்டு, தப்பியுள்ளார்கள்இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மெத்தம்பேட்டமைன் போதை பொருள் இருந்துள்ளது.விசாரணையில் அந்த போதைப்பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்துவதற்காக மற்றொரு படகில் சேர்க்கும் பொருட்டு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது