Tamilnadu

புர்காவில் தங்கத்தை கடத்தி சிக்கிய சிங்க பெண்.. நல்ல வசதி!

burqa
burqa

வெளிநாட்டில் இருந்து புர்கா ஆடைக்குள் தங்கத்தை நல்ல வசதியாக கடத்தி பிடிபட்ட பெண் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.


தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற ஆயிஷா(பெயர் மாற்றம் )துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

]அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் பெண். மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புர்கா புனிதமான உடை என இஸ்லாமிய அமைப்புகள் சில கூறிவரும் நிலையில் அதே உடையை சிலர் கடத்தலுக்கு பயன்படுத்துவது சமீப காலத்தில் அதிகரித்து இருப்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் தெரியவந்துள்ளது, சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் புர்கா விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில் புர்கா அணிந்து சென்ற முஸ்கான் என்ற பெண்ணிற்கு சிங்க பெண் என்ற பட்டதை பல அமைப்புகள் வலியுறுத்தினர்.

ஆனால் புர்காவில் தங்கத்தை கடத்தி சிக்கிய பெண்ணிற்கு எதிராக எந்த அமைப்புமே குரல் கொடுக்கவில்லை மேலும் சிலர் தங்கத்தை கடத்தி சிக்கிய பெண்ணை சிங்க பெண் எனவும் சமூகவலைத்தளத்தில் கிண்டல் அடித்துவருகின்றனர்.

More Watch Videos