அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான பானு கோம்ஸ் நடந்து முடிந்த நகராட்சி தேர்தல் குறித்தும் அதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
இந்த முறை தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக இருந்தது என்றே சொல்லவேண்டும். உற்சாகத்துடன் கூடிய சுணக்கமற்ற பிரச்சாரத்தை காண முடிந்தது.கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் காலை நேரத்தில் முதலில் ஒலிக்கக் கேட்கும் பாடலாக இருந்தது பாஜகவின் தேர்தல் பிரச்சார பாடல் தான், ரஜினியின் பழைய ஹிட் பாட்டின் tune என்பதால் மக்களுக்கு எளிதில் சென்று சேர்ந்தது.
தனித்து போட்டி என்பதால் குழப்பங்கள் இன்றி தாமரைக்கான பிரச்சாரம் குக்கிராமங்கள் வரை தெளிவாக ஒலித்தது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சூறாவளி பிரச்சாரத்திற்கு தனி பாராட்டுகள்.அண்ணாமலையின் ஒவ்வொரு பேட்டியும், பிரச்சாரமும் தவறவிடக் கூடாத ஒன்றாக இருக்கின்றன.
தெளிவான விபரங்களோடு நேரடியாக பேசுகிறார். மேம்போக்கான வெற்றுப் பேச்சுகள் எதுவும் இல்லாமல் இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.இந்த அம்சங்கள் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது. தமிழகத்திற்கு...நல்லதொரு அரசியல் தலைவர் கிடைத்திருக்கிறார்,
தமிழக பாஜக விற்கும்...நீண்ட காத்திருப்புக்கு பின்..தரவுகளுடன் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் பேசி உறுதியுடன் நிற்கும் சரியான அரசியல் தலைவர் கிடைத்திருக்கிறார்.கொங்கு மண்டலத்தில் மேற்கொண்ட 4 நாள் பயணத்தில்...தாமரைக்கு எதிரான கட்சிகளின் தீவிரமான தேர்தல் நேர பிரத்தியேக பணிகளை காண முடிந்தது.
ஒட்டுமொத்தத்தில் சுணக்கமற்ற பிரச்சாரம், குக்கிராமங்கள் வரை குழப்பமின்றி கொண்டு சேர்க்கப்பட்ட தாமரை சின்னம், மக்களை கவரும் தலைவராகஅண்ணாமலை ...என்று....'தேர்தல்களுக்கு அப்பாற்பட்ட' தனியானதொரு வெற்றிமுகத்தை குறுகிய காலத்தில் அடைந்திருக்கிறது தமிழக பாஜக என பாராட்டு தெரிவித்துள்ளார் பானு கோம்ஸ்.
More Watch Videos