நச்சுன்னு 3 கேள்வி..! 3 ஆப்ஷனிலும் நடிகர் சூர்யா தான்..! இதை விட்றதா இல்லையாம்! முகநூலில் ஜெயம் எஸ்.கே.கோபி ஆணித்தரமான பதிவு!suriya jaibhim
suriya jaibhim

தமிழகத்தில் ஜெய்பீம் பட விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தாலும், இந்த பிரச்சனை இதோடு ஓய்வதாக இல்லை என்று உணர வைக்கின்றது. 

காரணம்... கடந்த நவம்பர் 1ஆம் தேதி OTT தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானதும் அப்படத்தை பார்த்த பின் நவம்பர் இரண்டாம் தேதி அன்றே ஜெயம் எஸ்கே. கோபி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இடுகிறார்.

அதில் தோழர் சூர்யா வேலைய காட்ட  ஆரம்பிச்சுட்டாப்ல  குறியீடு : வன்னியர் சமூக ஆளை குறியீடாக காட்டி இருக்காங்க படத்தை படமா பாருங்கடா- னு அட்வைஸ் பண்ற புரட்சி போராளிகளுக்கு என்னோட பதில் இதே மாதிரி  திரௌபதி ருத்ரதாண்டவம் படத்தையும் ஏண்டா நீங்க படமா பாக்கல


இவ்வாறு குறிப்பிட்டு இப்படத்தில் வரும் காட்சிக்கு பின் வைக்கப்பட்ட காலண்டர்-ஐயும் மார்க் செய்து பதிவு செய்து இருந்தார். அதன் பின்பு பெரும் பூகம்பமாக வெடித்த இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? எப்படி முடிவுக்கு வரும் ? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. நாளுக்கு நாள் புதுப்புது விவகாரம், நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சர்ச்சை ஒரு பக்கம்,ஒரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் மறுபக்கம் பெரும் கண்டனக்குரல் எழுவதும்,

ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுவதும் அதற்கு மறுமொழியாக சூர்யா நன்றி தெரிவிப்பதும் ....பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்திற்கு மறு கடிதமாக உதாசீனம் செய்வது போல சூர்யா பதிலளித்தது என அனைத்தும் பெரும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. 

இதையெல்லாம் தவிர்த்து, சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அடுத்த கட்டமாக பல ஊர்களில் இருக்கக்கூடிய ரசிகர் மன்ற பேனர்களையும் கொளுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு இடுகின்றனர். இதன் மூலம் நாளுக்கு நாள் சூர்யாவுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பாமக இந்த பிரச்சனை தொடர்பாக பல வழக்குகளைத் தொடர்ந்து இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் படம் வந்து 20 நாட்கள் ஆகியும் தீர்வு எட்டப்படாத நிலையில் நேற்று இப்படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இதோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா என்றால், சூர்யா மன்னிப்பு  கேட்டால் தான்  முடிவுக்கு வரும் என்பதை உணர்த்தும்  வகையில், மேலும் ஒரு பதிவை இட்டுள்ளார் ஜெயம் எஸ் கே. கோபி .அதில்,  ஜெய்பீம்_விவகாரத்தை முடிக்க போவது யார் ?

Options (A) நடிகர் சூர்யா  (b) தயாரிப்பாளர் சூர்யா (C) நடிகர் சிவக்குமாரின் மூத்தமகன் சூர்யாஇதன் மூலம் எப்போது தான் ஜெய் பீம் சர்ச்சை முடிவுக்கு வருமோ? என்ற எதிர்பார்ப்பு கிளப்பி இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out