Tamilnadu

உண்ணாவிரத களத்தில் எம்.ஆர்.காந்தி அடுத்த பரபரப்பு !

Mr gandhi nagarkovil
Mr gandhi nagarkovil

தமிழகத்தின் மிக நீண்ட அரசியல்வாதியும் தற்போதைய நாகர் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர் காந்தி இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து எம் ஆர் காந்தி கொடுத்த மனு பின்வருமாறு :- 

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் புதைச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல் அணைகள் நிரம்பி வழிந்த போதும், நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் குடிநீா் வழங்க வேண்டும்.

நாகா்கோவில் மாநகர சாலைகளை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை அருகே வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் 13 ஆம் தேதி காலை 10 மணி வரை 3 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்டத்தை மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ் தலைமை வகித்து தொடங்கிவைக்கிறாா். இதில், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவா் நயினாா்நாகேந்திரன் சிறப்புரையாற்றுகிறாா். கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டா்களுடன் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளேன் என அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேற்படி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் இன்று நாகர்கோவிலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தை தொடங்கியுள்ளார் காந்தி அவருடன் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் கேரளாவிடம் உரிமையை இழந்ததாக தேனியில் பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் போராட்டம் நடந்த நிலையில் தற்போது நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி போராட்டத்தில் இறங்கி இருப்பது அடுத்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.