மேடம் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்.. வெளுத்து எடுத்த ஸ்ரீராம் !sriram
sriram

தமிழக செய்தி தொலைக்காட்சி விவாதங்கள் அண்ணாமலை தெரிவித்த   ஊழல் புகார் அடிப்படையில் பற்றி எரிகின்றன, அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்திய போது விவாதம் செய்யாத பல ஊடகங்கள், செந்தில்பாலாஜி கொடுத்த விளக்கத்தினை முன்வைத்து விவாதங்களை ஏற்பாடு செய்தன.

அதில் நெறியாளர்கள் பலர் கேட்கும் முதல் கேள்வி ஆதாரம் எங்கே ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை என தான் முதல் கேள்வியாக கேட்கிறார்கள் , ஆனால் அண்ணாமலை குறிப்பிட்ட தகவலில் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், அது என்ன என குறித்து  ஸ்ரீராம் விவாதம் ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

அதில் செந்தில் பாலாஜி கொடுத்த பதிலுக்கு முன்னர் செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பதை பார்க்க வேண்டும் அவர் மீது கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என பலரும் ஊழல் குற்றசாட்டுகளை முன்வைத்து ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர், என தொடங்கினார் அப்போது குறுக்கிட்ட நெறியாளர் ஆதாரம் இருக்கா இல்லையா என கேட்க மேடம் ஒரு நிமிஷம் என்ன பேச விடுங்க விவாதத்திற்கு அழைத்து விட்டு நீங்கள் பேசினால் எப்படி இப்போது அண்ணாமலை தெரிவித்த குற்றசாட்டுக்கு ஆதாரம் கொடுக்கிறேன் என விளக்கம் கொடுத்தார்.

போதுமான நிலக்கரி கையிருப்பு இருக்கும் போது ஏன் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டும் அதிலும் குறிப்பாக  கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய கம்பெனி திமுக ஆட்சியில் எப்படி லாபத்திற்கு மாறியது, இதையெல்லாம் கோர்த்து பாருங்கள், என பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்து வைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது விவாதங்களில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் குறிப்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்தில் ஆதாரம் உள்ளது என தெரிவிக்கும் வகையில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் சொல்லும் பதிலும் கொடுக்கும் பதிலடியும் எதிர் தரப்பை கடும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராம் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out