தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மின்சாரத்துறையில் ஊழல் நடைபெற இருப்பதாக குறிப்பிட்ட தகவல், அதன் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி ஸ்வீட் வழங்குவதில் 30% கமிஷன் கண்ணப்பன் மகன் பெற்றுள்ளார் என்ற பல்வேறு ஊழல் குற்றசாட்டுக்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்கு உள்ளாக எழுந்துள்ளன.
இந்த சூழலில் அண்ணாமலை தெரிவித்த ஊழல் குற்றசாட்டு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது, குறிப்பாக செந்தில் பாலாஜி ஆதாரத்தை வெளியிடுங்கள் என அண்ணாமலைக்கு சவால் விட, அண்ணாமலை முதற்கட்டமாக தகவல் ஒன்றை வெளியிட்டார் அதில் 4% கமிஷன் பெறப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட விஷயம் தீ பற்றி கொண்டது.
இந்த நிலையில் ஊழல் குற்றசாட்டு விவாகரத்தில் வேறு ஆதாரம் வேண்டும் என இணைய திமுகவினர் வலியுறுத்தி வந்தனர், அவர்களுக்கு தற்போது மாரிதாஸ் பதில் அளித்து உள்ளார், இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பல்வேறு சம்பவங்களை சுட்டி காட்டிய அவர் ஊழல் நடைபெற காரணமான ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடிக்கியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அண்ணாமலை ஒருவரையே சந்திக்க ஆளும் கட்சி திணறிவரும் வேலையில், மாரிதாசும் அண்ணாமலை உடன் மின்துறை ஊழலில் இணைந்து ஊழல் பட்டியலை வெளியிட்டு இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.
"சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா" ஆதாரம் கேட்டவர்கள் எல்லாம் வரிசையில் வாருங்கள் என பாஜகவினர் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.