தற்போது இருக்க கூடிய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. அதுவும் பெரிய பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும், பிரபலங்களுக்கும் தங்கள்து கருத்துக்களை பதிவிட ஏற்ற ஒரு தளம். இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் ஒருவர் நல்லவரா அல்லது அவர் மீது சாயம் பூசலாமா என்பதை எல்லாம் சமூவலைத்தளம் மூலமாகவே முடிவு செய்துகொள்ளும் அளவுக்கு நெட்டிசன்கள் பதிவுகள் இருக்கும்.
அதே வேளையில், சமூக வலைத்தள நிறுவனங்களும் பாரபட்சம் பார்த்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பிரீ ப்ரோமோஷன் கூட செய்யும். அதே வேளையில் ஒருவர் ஆட்சியை பிடிக்க கூடாது என முடிவு எடுத்து விட்டால் அவர்களுக்கு எதிரானவர்கள் பலத்தை பொறுத்து அவர்களுடன் கை கோர்த்து ஒருவரின் செல்வாக்கை குறைத்து விடுவார்கள்.
இப்படியான நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் சர்ச்சையான கருத்துக்களை டிரம்ப் பதிவிட்டு உள்ளதாக அவரது சமூக வலைத்தள பக்கத்தை முடக்கியது ட்விட்டர் நிறுவனம். பேஸ்புக் நிறுவனமும் அதே வேலையை தான் செய்தது. இந்த ஒரு நிலையில் போடா டுபுக்கு.. நானே இப்ப கம்பெனியை தொடங்கிட்டேன்..
நீ எந்த ஆணியும் புடுங்காதே.. என்ற பாணியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்த சமூக ஊடகமான TRUTH Social செயலியை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது “ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியாக எனது சொந்த சமூக ஊடகமான TRUTH Social செயலி அமையும்” என தெரிவித்துள்ளார்.
இதை எல்லாம் தாண்டி, ட்விட்டர் பற்றி தெரிவிக்கும் போது தாலிபான்கள் அதிகம் பயன்படுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம் என குறிப்பிட்டு உள்ளார். எனவே தான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்குக்கு எதிராக TRUTH Social என்ற எனது சொந்த செயலியை உருவாக்கி உளேன். இந்த சேவை வரவும் 2022ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் பயப்பாட்டிற்கு வரும் என் தெரிவித்து உள்ளார். இந்த செயலியில் சந்தா, வீடியோ பொழுதுபோக்கு, செய்திகள், ஆகிய சேவைகள் அனைத்தும் இடம் பெரும் என தெரிவித்து உள்ளார்.
ட்ரம்பின் இந்த முயற்சி மற்றும் செயல்பாடு FACEBOOK மற்றும் ட்விட்டருக்கு கொஞ்சம் ஈகோ டச் பண்ற மாதிரி உள்ளது என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.