சட்டமன்ற தேர்தல் களம் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரை வெளியாகி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அதிமுக திமுக கூட்டணிகள் சம பலத்துடன் தேர்தலை எதிர் கொள்வதால் இந்த தேர்தல் இரண்டு அணிக்கும் சாதகமான சூழலாகவும் தொங்கு சட்டமன்றம் அமையவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் வட மாவட்டங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன, வன்னியர் சமூகத்திற்கு 10.5 % உள் ஒதுக்கீடு கொடுத்த பின்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அதிமுக பாமக பாஜக கூட்டணிக்கு சாதகமாக வட மாவட்டங்களில் குறிப்பாக பாமாகவிற்கு சாதகமாக அமையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் வழக்கறிஞர் பாலு, இந்த தொகுதி காடுவெட்டி குரு MLA வாக வெற்றி பெற்ற தொகுதி, பாமாகவிற்கு என்று தனி செல்வாக்கு கொண்ட தொகுதி கடந்த தேர்தலில் தனித்து களம் இறங்கிய பாமக இரண்டாம் இடம் பிடித்ததுடன் 25.8 % வாக்குகளை பெற்றது.
இங்கு தற்போது சிட்டிங் எம். எல். ஏ வாக அதிமுக எம். எல். ஏ ராமஜெயலிங்கம் உள்ளார், இந்த தொகுதி பாமாகவிற்கு ஒதுக்கப்பட்டதால் சிட்டிங் MLA அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது, மேலும் காடுவெட்டி குருவின் மகன் அல்லது அவரது மனைவி இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இதன் மூலம் பாமக வாக்குகள் சிதறும் எனவும் எளிதாக வெற்றி பெறலாம் என கணக்கிட்டு KSK கண்ணன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக, ஆனால் அங்குதான் ட்விஸ்ட்டே நடந்துள்ளது, சிட்டிங் அதிமுக எம். எல். ஏ வை நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து அவரது ஆதரவை பெற்றுள்ளார் பாமக வேட்பாளர்,அதோடு நில்லாமல் காடுவெட்டி குருவின் மகன் திமுகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் பாமகவின் வாக்குகள் சிதறி அதன் மூலம் வெற்றி பெறலாம் என இருந்த திமுக கனவை சிதைத்துள்ளது.
தொடர்ந்து பாமக வேட்பாளர் தொகுதி முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு என அடுத்தடுத்த நிகழ்வின் மூலம் தொகுதியில் தீவிரமாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.பாமாவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தற்போது ஜெயங்கொண்டம் தொகுதி முன்னிலை வகிக்கிறது.