எழுத்தாளர் சுந்தரராஜன் சோழன் மம்தாவை எதிர்க்கட்சிகள் முன்னிலை படுத்துவதன் நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அதிலும்..இந்திய அளவில் மம்தாவின் எழுச்சி என்பது மேற்குவங்கத்தில் ஹிந்துக்களுக்கு நடந்த கொடூரத்தை நாட்டின் பொதுத்தன்மையாக மாற்றுவதன் அறிகுறியே என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-காங்கிரஸ் எவ்வளவு முயன்றும் மென் இந்துத்துவ வாக்குகளை மோடிக்கு எதிராக திருப்ப முடியவில்லை.கடந்த குஜராத் மாநில தேர்தலில் தொடங்கி இந்த நிமிடம் வரை அதனால் இதைச்செய்ய முடியவில்லை. போதாதென்று சிறுபான்மை வாக்குகளும் காங்கிரஸ்ஸை விட்டு வெளியேறி சிதறுகின்றன.
ஒருவேளை மாநில கட்சிகள் மோடி எதிர்ப்பை செய்து, அதே கட்சி காங்கிரஸிற்கு மத்தியில் கூட்டணி தரவில்லை என்றால், பாஜகவை வீழ்த்த முடியாது எந்தக் காலத்திலும் என்பதே பாலபாடம். இதை தெளிவாக உள்வாங்கிக் கொண்ட எதிர்தரப்பு, காங்கிரஸ் அல்லாமல் ஒரு பொதுத்தளத்தை உருவாக்க நினைக்கிறது.
இதனுடைய நோக்கம் பாஜக மீது அதிருப்தியில் உள்ள ஹிந்துக்களை ஜாதியாக உடைப்பது, அடுத்தது சிறுபான்மையினர்கள் வாக்குகளை தேசிய அரசியலில் சிதறாமல் ஒருங்கிணைப்பது. இதில் பெரிய குறி ஹிந்துக்களை முடிந்த அளவு உடைப்பதே. இதற்கு உருவமாகத்தான் மம்தாவை முன்னிறுத்துகிறார்கள்.
மம்தாவின் எழுச்சி பாஜகவிற்கு லாபம் என்கிற கருத்துருவாக்கத்தை உருவாக்கி ஹிந்து வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம். இப்படி செய்தால் பாஜகவை வீழ்த்திவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஆனால், பாஜகவினுடைய வெற்றியின் வீச்சை குறைக்க முடியும்.இதுதான் அவர்களின் திட்டம்.
இந்திய அளவில் மம்தாவின் எழுச்சி என்பது மேற்குவங்கத்தில் ஹிந்துக்களுக்கு நடந்த கொடூரத்தை நாட்டின் பொதுத்தன்மையாக மாற்றுவதன் அறிகுறியே. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற பின்பு இந்துக்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டதும் அந்த விவகாரம் தேசிய அளவில் மிக பெரிய பிரச்னையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.