கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது கடும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது, மத்திய அரசின் திட்டம் ஒன்றிணை செயல்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜோதிமணிக்கு முறையான அனுமதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் என்னை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்துள்ளனர் ஆனால் கரூர் ஆட்சியர் மட்டும் ஏன் அனுமதி அளிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஜோதிமணி தெரிவித்தது பின்வருமாறு : ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன்.
ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?
இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார். கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி, இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணி இடையே அரசியல் ரீதியான மோதல் வெடித்துள்ளதாகவும்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்தே பிரச்சாரத்திற்கு ஜோதிமணியை அழைக்காமல் செந்தில் பாலாஜி புறக்கணித்து இருப்பதாகவும் இதையடுத்து தற்போது இருவருக்குமான நீயா நானா போட்டியில் மக்கள் நலத்திட்டங்கள் நடத்துவதில் கூட முழுமையான ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்தே கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் ஜோதிமணி புறக்கணிக்க படுவதாக காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். ஜோதிமணி செந்தில் பாலாஜி இருவருக்கும் இடையே நடைபெறும் அரசியல் அதிகாரபோட்டியில் ஜோதிமணி கனிமொழி பெயரை சுட்டிக்காட்டி இருப்பது கூட்டணி கட்சியினர் இடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது, அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை கூட குறிப்பிட ஜோதிமணிக்கு பயமா என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.