Cinema

நடிகர் விவேக் இறப்பின் உண்மையான காரணம் வெளிவந்தது..! கவலையில் திரைத்துறை !!

நடிகர் விவேக் இறப்பின் உண்மையான காரணம் வெளிவந்தது..! கவலையில் திரைத்துறை !!
நடிகர் விவேக் இறப்பின் உண்மையான காரணம் வெளிவந்தது..! கவலையில் திரைத்துறை !!

விவேக் தமிழ்த் திரைப்படதுறையை சேர்ந்த முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.


                                                                    

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

                                                                    

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலப்படுத்தியது.  இந்நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று மருத்துவமனை சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள், விவேக் தடுப்பூசி போட்டு கொண்டதால் தான் இறந்தார் என பேச கடும் அதிர்ச்சி உண்டானது.

                                                                 
மருத்துவமனை சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும், மக்கள் மனதில் விவேக் மரணம் குறித்த சந்தேகம் அதிக அளவில் இருந்தது, தற்போது நடிகர் விவேக் இறப்பு குறித்து அதிகார பூர்வ அறிக்கை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விவேக் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது, அதில் மாரடைப்பு 8 நாட்களுக்கு முன்பே சிறு அறிகுறியுடன் இருந்ததாகவும் 100% சதவிகிதம் இதயதில் அடைப்பு உண்டானதே விவேக் இறப்பிற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

                                                              

மேலும் தொடர் மன அழுத்தமே அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கொரோனா தடுப்பூசி மூலம் விவேக் இறந்தார் என்ற செய்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் விவேக் மன அழுத்தத்தில் இருந்தார் அதன் காரணமாக மாரடைப்பு உண்டாகி இருக்கலாம் என்ற செய்தி திரை துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.