Tamilnadu

பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மாரிதாஸ் கொந்தளிப்பு

Maridhas images
Maridhas images

 தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக தெலுங்கானா போல் பிரிய வேண்டிய நேரம் இது. ஏன்? என மாரிதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


மாரிதாஸ் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு : 10 தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி விவரம்:மதுரை : 3,72,123, தேனி : 1,05,922 திண்டுக்கல் : 1,22,877 சிவகங்கை : 1,12,026 தூத்துக்குடி : 92,221 புதுக்கோட்டை  87,262 கன்னியாகுமரி 1,90,208 திருநெல்வேலி 1,47,718 ராமநாதபுரம் : 56,202 விருதுநகர் : 1,29,782

மொத்தம் : 14,16,341 தடுப்பூசிகள்.மொத்தம் 15 லட்சம் கூட தடுப்பூசி கூட கிடைக்கவில்லை. ஆனால் சென்னை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 20,90,310 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக அரசு. இந்த நிலை தென் மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் ஆரம்பித்து எந்த மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை. இதற்கு மேலும் சும்மா தமிழ் நாடு என்று சொல்லி ஏமாறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

நிறுவனங்கள் தமிழகம் வருகிறது என்பார்கள், தொழிற்சாலைகள் தமிழகம் வருகிறது என்பார்கள் அனைத்தும் சென்னை நோக்கிச் செல்லுமே ஒழியத் தென் தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காது. இதற்குப் பேர் வளர்ச்சியா?கொடுமை கொரொனா காலத்தில் கூட தடுப்பூசியில் கூட தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படும் என்றால் தாமதம் இல்லாமல் தெலுங்கானா போல் தனி மாநிலமாகப் பிரிவது தான் ஒரே தீர்வு.

தமிழ் நாடு 3,4 மாநிலமாக பிரிந்தாலும் அதை வரவேற்போம். ஆனால் இனியும் முட்டாள்களாகப் பிச்சை எடுக்க முடியாது. இவ்வாறு கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார் மாரிதாஸ். ஏற்கனவே திமுக அரசு கோவை மாவட்டத்தை வஞ்சிப்பதாக எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களையும் புறக்கணிப்பதாக வெளிவரும் எதிர்ப்பு குரல்கள் வரும் காலத்தில் திமுகவிற்கு மிக பெரிய பின்னடைவை கொடுக்கலாம் என கூற படுகிறது.