90's கிட்ஸ்
தலையில் விழுந்த இடி..!! திருமணம் செய்ய இனி இதுவும் வேண்டும்...!
தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே திருமணம் அனுமதிக்கப்படும் என மத்திய பிரதேசத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.மத்திய பிரதேச அரசு கொரானா தொற்றை கட்டுப்படுத்த பலவகைகளில் செயல்பட்டு வருகிறது.
அதன்
பலனாக சீனத்தொற்று குறையத்தொடங்கியுள்ளது. அதையடுத்து மாநில அரசு ஊரடங்கில் சில
தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி திருமண சுபகாரியங்களுக்கும் அனுமதி வழங்கியிருந்தது.
மத்திய
பிரதேச மாநிலம் பலகாட் நகரத்தின் வாரசோனி நிர்வாகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
"பாலகாட் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சார்ந்தவர்கள் திருமணத்திற்கு அனுமதி கோரும் ஆவணத்துடன், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆவணங்களையும் இணைக்க வேண்டும்" என அறிவித்துள்ளது.
சப்டிவிஷன்
மாஜிஸ்ட்ரேட் சந்தீப்சிங் பிறப்பித்த உத்தரவில்"திருமணத்திற்கு அனுமதி பெற இணைக்கப்படும் ஐந்து
ஆவணங்களில் மணமகன்,மணமகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
நெட்டிசன்கள் "ஏற்கனவே 90's கிட்சுக்கு பொண்ணு கிடைக்காது..இது வேறயா" என
கிண்டலடித்து வருகின்றனர்.
..உங்கள்
பீமா