Tamilnadu

நேற்று சாப்பிட அரிசி கிடைக்கவில்லை என திமுக அரசை குறை கூறிய கிறிஸ்தவ பெண்ணிற்கு இன்று ஏற்பட்ட பரிதாபம்

Tamil news
Tamil news

கொரோனா ஊரடங்கு காரணமாக தங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை எனவும், ரேஷன் கார்டு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் தங்களுக்கு என்ன உதவியை தமிழக அரசு செய்ய போகிறது என நேற்று பெண் ஒருவர் திமுக அரசை குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டு இருந்தார்.


இந்த வீடியோவை tnnews24 வெளியிட இணையத்தில் வைரலாகியது, இதுவரை 20 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ள நிலையில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் tnnews24 தளத்தில் பெண்ணின் செல் போன் எண் கேட்டு உதவுவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று திமுக அரசை குறை கூறிய பெண் தற்போது கை குழந்தையுடன் அழுது கொண்டு மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நான் எனது குறையை கூறியதற்கு கிடைத்த தண்டனையா இது, என்னுடைய வீட்டில் 5 கிலோ அரிசி இருந்தால் எடுத்து விட்டு என்னை தவறாக பேசுங்கள் என அழ அவரது குழைந்தை அவரது கண்ணீரை துடைத்து விடும் வீடியோ வெளியாகி நெஞ்சை பதற செய்கிறது.

மேலும் இதே போன்று மிரட்டல் விடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய போவதாகவும், அந்த பெண் அழுது கொண்டு பேசுவது தமிழக மக்கள் மனதில் திமுக ஆட்சியை குறை கூறினால் தங்களுக்கும் இதுதான் நிலையா என்ற பயத்தை உண்டாகியுள்ளது.


சிறுபான்மையினரின் காவலர் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த பெண் சிறு குறை கூறிய நிலையில் அவரே தற்கொலை செய்ய போகிறேன் என வீடியோ வெளியிடும் அளவிற்கு அந்த பெண்ணை இக்கட்டிற்கு தள்ளுவது பாசிசம் இல்லையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏழை பெண் ஒருவர் தற்கொலை செய்யும் நிலைக்கு தமிழகத்தில் காட்டுமிராண்டி ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, சமூக ஆர்வலர்கள், பெண்ணிய செயல்பட்டார்கள், சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.