Tamilnadu

அனைத்தையும் எதிர்கொள்ள தயார் முக்கிய முடிவை எடுத்த மாரிதாஸ் அதிரடி விளக்கம்!!!

Maridhas-mkstalin
Maridhas-mkstalin

சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது அதற்கான காரணம் என்ன? ஏன் தற்போது அதிகமாக வீடியோ வெளியிடுவது இல்லை என்ற கேள்விகளுக்கு மாரிதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.


தேர்தல் 2021 யார் வெற்றி பெற வாய்ப்பு உண்டு? உங்கள் நிலைப்பாடு என்ன? ஏன் அதிகமாக வீடியோ போடுவதில்லை? என்று பல கேள்விகள். அவைகளுக்கு என் பதில்.தமிழகத்தில் தற்போதைய (மார்ச் 13 ) நிலையில் மக்களிடம் திமுக ஆதரவு அலை என்று ஒன்று இல்லை; அதே நேரம் அதிமுக ஆதரவு அலையும் இல்லை. ஒரு வித மந்த போக்கு தான் உள்ளது. பழனிச்சாமி அவர்கள் நிலை?ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பலை என்பது இல்லை அதன் காரணம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் மக்கள் என்று அர்த்தம் ஆகாது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மக்கள் அமர்த்தப்பட்ட முதல்வராகவே பார்க்கிறார்கள் அதனால் அவர் மீது எதிர்ப்பும் பெரிதாக இல்லை ஆதரவும் இல்லை. எளிமையாகக் கூறினால் பெரிய சக்தியாக நினைக்கவில்லை,  மக்கள்  கண்டுகொள்ளவில்லை. அரசியலில் கண்டுகொள்ளாமல் போவது ஆபத்தான ஒன்று; எதிர்ப்பு இருக்க வேண்டும் இல்லை ஆதரவு இருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் கண்டுகொள்ளாமல் விடுவது தலைமைக்கு நல்லதல்ல.

சரி , ஸ்டாலின் அவர்கள் நிலை? அது அதைவிட மோசம். மக்கள் அல்ல திமுக நிர்வாகிகள் கூட கூறுவது ஸ்டாலின் அவர்களுக்குக் கருணாநிதி போன்று திறமை இல்லை. திறமையான தலைவர் இல்லை என்பதை அந்த கட்சி நிர்வாகிகளே ஏற்கிறார்கள் மக்களும் அப்படியே பார்க்கிறார்கள். ஆனால் 2021 தேர்தல் உண்மையில் தலைவர்களுக்கான வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பப் போவது யார்? என்ற கேள்விக்கு விடை தான் தேர்தல் முடிவு. யார் வெற்றி யார் இரண்டாம் இடம் இதைப் பொறுத்து தலைமைக்கான வெற்றிடம் நிரப்பப்பட்டு அடுத்த கால் நூற்றாண்டுக்கு அது தொடர வாய்ப்பும் உண்டு.

அத்தோடு 2021 தேர்தல் நிச்சயம் பல இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் தேர்தல் அதுவும் இந்த 2021 தேர்தலில் நடக்கும்.சரி யார் தற்சமயம் வெற்றி பெற வாய்ப்புண்டு?சசிகலா அவர்களை ஏற்காத நிலையில் தொடரும் இரட்டை தலைமை , தினகரன் அவர்களின் அமமுக என்று உட்கட்சி குழப்பமும் கட்சி ஓட்டுகள் பிரிவதுமாகப் பலவீனமாக உள்ளது அதிமுக. தேர்தல் சீட்டு கிடைக்காததால் உள்ளடி வேலைகளும் ஆரம்பம்.


உண்மையில் தற்போது சசிகலா , தினகரன் , எடப்பாடி பழனிச்சாமி , பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றாக நின்று தேர்தலை எதிர் கொண்டிருந்தால் நிச்சயம் திமுக வீழ்த்துவது எளிது. காரணம் திமுக எதிராக உள்ள சுமார் 60% வாக்குகளில் குறிப்பிட்ட அளவு ஒன்றிணைக்கும் சக்தியாக அதிமுக முழு பலத்தோடு மோதும் என்றால் திமுக எதிர்ப்பு எளிது. ஆனால் சிதறும் நிலையில் சுமார் 38% வாக்குகளைப் பெற்று 1989 போல் ஆட்சியை திமுக கைப்பற்றும் என்றே தோன்றுகிறது.ஆக திமுக வெற்றிக்கு வழுவான அதிமுக இல்லாததே காரணம் ஆகும்.

கூடுதல் விசயம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அதிமுக ஓட்டுகளை பாஜகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளுக்கு திருப்ப முடியாது என்பது கசப்பான உண்மை. அதிமுக நிர்வாகிகளே கூட பல இடங்களில் பாஜக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு உழைக்க தயார் இல்லை. இது தான் ஜெயா தலைமையிலான அதிமுகவிற்கும், பழனிசாமி தலைமையிலான  அதிமுகவுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம்.

எனவே அதிமுகவிற்கு கூட்டணி கட்சிகளால் லாபம் உண்டு ஆனால் அதிமுகவால் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமாக பாஜகவிற்கு பெரிய லாபம் இருக்காது.இது தான் என் மட்டத்தில் தோன்றும் கருத்து.. சரி நாம் என்ன செய்வது?

திராவிட அரசியலுக்கு எதிரான மாற்றத்திற்கான தேவை உள்ளது; ஏன் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் தேவை என்று தீவிரமாகப் பிரச்சாரம் கடந்த 4 ஆண்டுகள் மேலாக செய்துவிட்டோம். இந்த நிலையில் தற்போது எதாவது ஒரு திராவிட கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க கேட்டோம் என்றால் நம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை உடைக்கப்படுவதோடு பணம் வாங்கிக் கொண்டு இந்த கட்சி ஆதரவு கொடுத்தார் என்று எளிமையாகப் பேசிவிட முடியும்.

எனவே எந்த கட்சி சார்பு நிலைப்பாடும் எடுக்காமல் "பொது எதிரி திமுக வீழ்த்தப்பட வேண்டும்" என்ற மட்டத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் என் மட்டத்தில் சரியான செயலாக இருக்கும். ஆனால் நம் தொடர் உழைப்பின் காரணமாக மக்கள் மத்தியில் திமுக எதிர்ப்பு உருவாகி, மக்கள் திமுக மீது நம்பகதன்மை இழந்துள்ளனர் அதனால் தான் 38% முதல் 40% வாக்குகள் மட்டுமே திமுக கூட்டணி பெரும் நிலைக்கு அந்த கட்சி ஒடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் குறிப்பிட்ட அளவு சாதனையை செய்துள்ளோம் என்று நிச்சயம் கூற முடியும். ஆனால் அதை வெற்றியாக மாற்ற காலம் சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை என்ற வகையில் தான் பின்னடைவே ஒழிய நிச்சயம் நாம் ஒரு அதிர்வை அரசியலில் உருவாக்கியுள்ளோம்.

என் மட்டத்தில் நான் எடுத்த வேலையை முழுமையாக எந்த தயக்கமும் இல்லாமல் செய்தேன், ஆனால் எதிர்பாராத பல ஏமாற்றங்கள் என்ற போதும் அது எதற்கும் நான் யாரையும் குறை சொல்லிவிட முடியாது. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது குழப்பமாக இருக்கிறது.  எது நடக்க இருக்கிறதோ, அதை எதிர் கொள்ளத் தயார். என மரிதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.