Politics

தியாகி செந்தில் பாலாஜியின் அரசியல் குளோஸ்... டாஸ்மாக் வழக்கில் சிக்கியது மொபைல் போன்கள்..மொத்த அரசியலுக்கும் விழுந்த ஆப்பு!

senthilbalaji
senthilbalaji

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்  முறைகேடு செய்துள்ளதாக  அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையால் ஆடிப்போயுள்ளது  திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பறிமாற்றம் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றபத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் உத்தரவாத தொகை செலுத்த விவகாரத்திலும் முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.தமிழக மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இப்போது திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள செந்தில் பாலாஜி, தற்போது அமைச்சராகஉள்ள செந்தில் பாலாஜி  அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை தனித்தனியாக விசாரித்து வருகிறது. 


இதற்கிடையே செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கு மேல் அவர் சிறையிலேயே இருந்தார். கைது செய்யப்பட்டபோது முதலில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சில காலத்திற்கு பிறகே ராஜினாமா செய்தார். அதன் பிறகும் பல மாதங்கள் கழித்தே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் முதல்வர் ஸ்டாலினால்  தியாகியாக போற்றப்பட்டார்  அதன் பின் ஜாமீனில் இருக்கும்போதே அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

அதேநேரம் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்ததுமுன்பு நடந்த விசாரிணையின் போதே இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அவர்கள் ஜாமீன் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஜெயராஜ் குமார், பழனி ஆகியோர் நீதிமன்றம் குறிப்பிட்ட ரூ.2 லட்சம் உத்தரவாதம் செலுத்தவில்லை.. இதனால் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், குற்றபத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜாராகிருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்த உத்தரவு செந்தில்பாலாஜியை மட்டுமல்ல திமுகவை பாதித்துள்ளது. நே சட்டப்பேரவைக்கு செந்தில் பாலாஜி வரவில்லை.இந்தநிலையில்  சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தபடி இருந்தார் செந்தில் பாலாஜி. அவரிடம் விவாதித்த சட்ட நிபுணர்கள், ''இதில் மாற்றி யோசிக்க ஏதுமில்லை சார். ரிசைன் பண்ணுவதைத் தாண்டி நீதிமன்றத்தின் கோபத்தை மாற்ற வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை'' என்று சொல்லியிருக்கிறார்கள்

மேலும் டாஸ்மாக் விவகாரத்த்தில் முக்கிய போனை கைப்பற்றி உள்ளது அமலாக்கத்துறை இதில் ஐந்து டாக்குமென்ட்டுகள் சிக்கியிருக்கின்றனவாம். சில மதுபான ஆலைப் பிரமுகர்களுடன் அவர் பகிர்ந்த தகவல்களையும் தோண்டியெடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. விரைவிலேயே, அந்தமூத்த  அதிகாரியிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கும் அமலாக்கத்துறை, அவருடைய போனிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கத்தயாராகி உள்ளது. இதில் செந்தில் பாலாஜி சிக்கினார் அவரின் அரசியல் வாழ்க்கை குளோஸ் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்கள்.