Tamilnadu

தமிழகத்தில் ஊடுருவிய வங்கதேசத்தினர் எங்கே? நேரடியாக இறங்கி கையில் எடுத்த விஷயம்! விஸ்வரூபம் எடுக்கும் மாபெரும் பிரச்னை!

mkstalin
mkstalin

ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாமுக்கு சுற்றுலா சென்ற 26 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி செல்லும் இடமான அழகு கொழிக்கும் பகல்ஹாமில் நடந்த இந்த தாக்குதலால் டாக்சி டிரைவர்ஸ், ஹோட்டல் நடத்துபவர்கள், வியாபாரிகள் என சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.2020ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 34 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேநேரம், 2023ஆம் ஆண்டின் முடிவில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்தைக் கடந்தது.கடந்த 2019-20இல் ஜம்மு காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு 7.84%. இது, 2022-23இல் 8.74% ஆக உயர்ந்தது. ஜம்மு காஷ்மீரில் 2021ஆம் ஆண்டில் இருந்து சுற்றுலாத் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 15.13% ஆக உள்ளது.இவ்வாறு வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்த காஷ்மீரின் வளர்ச்சி சில தேச துரோகிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது.


மேலும் இந்து முஸ்லிம்கள் என அரசியல் செய்துவரும் அரசியல்வாதிகள் எப்போது பார்த்தாலும் 370 சட்டத்தை நீக்கியது தவறு என கோஷமிட்டு அரசியல் செய்து வந்தார்கள். இன்றளவும் பாஜக அரசு கொண்டுவரும் சடட்டங்களுக்கு எதிராக பேசி வரும் அரசியல்வாதிகல் பிரிவினையைத்தூண்டி வருகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்தும் ஒட்டு அரசியலுக்காக போராட்டங்கள் என்ற பெயரில் அமைதியை  குலைக்கும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இங்கு பேனர் வைக்கலாம்,போராட்ட்டம் அறிவிக்கலாம் ஆனால் இந்தியர்கள் இறந்ததற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் கூட வைக்கவில்லை அப்படி வைத்தாலும் ஒரு மணி நேரத்தில் அதை தூக்க காவல்துறை வந்துவிடுகிறது. இது எந்த வித மனப்பான்மையை காட்டுகிறது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் ஆரமபத்தில் இது சிலிண்டர் வெடிப்பு என ஊடகங்கள் மூலம் திசை திருப்பியது. உண்மையை கூட சொல்ல தயங்கிவருகிறது ஊடகங்கள். அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர்.போலி ஆதாரங்களுடன் தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் மாநிலம் முழுதும் வரிசையாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டில், 175 பேர், லோக்கல் போலீஸ் மற்றும், 'கியூ' பிரிவு போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.போலி அடையாள அட்டை, போலி பணி அடையாள அட்டை வைத்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த 175  வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலரும் கோர்ட்டில் ஜாமின் பெற்று வெளியே வந்தனர். வந்தவர்களில் பலரை தற்போது காணவில்லை; எங்கிருக்கின்றனர் என்று தெரியாமல், போலீஸ் விழிக்கிறது 

போலி ஆதார் அட்டை, போலி பணி அடையாள அட்டை வைத்துக் கொண்டு சென்னை புறநகர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பெருந்துறை போன்ற இடங்களில் பணியில் இருந்த வங்கதேசத்தினரையே போலீசார் கைது செய்தனர்.அவர்கள் வேறு நாட்டுக்கு சென்று விட்டனரா, அல்லது தமிழகத்திலேயே வேறு ஊர்களில் பதுங்கி உள்ளனரா என்று தெரியாமல் தவிக்கிறது தமிழக போலீஸ்ஆனால் ஜாமீன் கிடைத்த வங்கதேசத்தவர்கள்  விஷயத்தில், திராவிட மாடல் காவல்துறையால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜாமீனில் சென்ற 75 வங்கதேசத்து முஸ்லிம்கள் கோர்ட் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் தற்போது இந்த விஷயம் வெளி வந்துள்ளது.மேலும் இது குறித்து விசாரிக்க சிறப்பு படை தமிழகத்தில் மேற்கொள்ள உளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.