Cinema

ஏன் "ஜோதிகா" பெயரை அதற்கு வைத்தார்கள் என்ற கேள்விக்கு H.ராஜா கொடுத்த மாஸ் பதில்...!

H.Raja about Jyotika speech
H.Raja about Jyotika speech

மலையாள திரைப்பட நடிகர் பஹத் ஃபாசில் நடித்த ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தை தர்மா விசுவல் கிரேஷன் நிறுவனம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழாக்கம் செய்து பட வெளியீட்டுற்கு தயாராகி உள்ளது . இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.


இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா , இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு நிலை மறந்தவன் படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.இதில் பாஜக சென்னை கவுன்சிலர் உமா ஆனந்த், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் செய்த சிவராமன், பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய H. ராஜா :- மதத்தை வியாபார பொருளாக்கி அதை வீதிக்கு வீதி விளம்பரம் செய்வதை இந்த திரைப்படம் வெளிக்கொண்டு வந்து உள்ளது. தமிழகத்தில் திராவிடன் மாடல் ஒரு பாசிசிட் மாடல். கவர்னரே என்ன பேசலாம் என்று கட்டளை பிறப்பிப்பார்கள்.நாகசாமி என்ற எழுத்தாளர் ஹிந்து மதத்தை பற்றி எழுதிய புத்தகத்திற்கு விருது வழங்கக்கூடாது என்று சுபவீரபாண்டியன் கூறிய இந்த இடத்தில் நிலைமறந்தவன் திரைப்படம் வெளியாகியது தரமான விஷயம்.

காஷ்மீரி பைல்ஸ் போல தமிழ்நாடு பைல்ஸ் என்ற திரைப்படத்தை கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து எடுக்கலாம். இந்த படத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள். இதன் பிறகு எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 

நிலையற்றவன் திரைப்படம் கிறிஸ்த்துவ மதத்திற்கு எதிரானது அல்ல. மத வியாபாரிகளை வெளிச்சம் போட்டு காண்பிப்பதே படத்தின் நோக்கம். மேலும் மதத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களை இந்த திரைப்படம் சுட்டிக் காண்பித்து உள்ளது என்பது முக்கியமான விஷயம். 

இதையடுத்து நிலையற்றவன் திரைப்படத்தில் சூரியா, ஜோதிகா, சற்குணம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள கதாபாத்திரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஜெய்பீம் திரைப்படத்தில் எப்படி அக்கினி கலசம் காலண்டர் ஒரு குறியீடாக இருந்ததோ,

அதேப்போல நிலைமறந்தவன் திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா என்கிற கதாபாத்திரமும் ஒரு குறியீடுதான்’ என எச்.ராஜா கூறினார் இதனால் எந்த பதில் கேள்வியும் கேட்காமல் நிருபர்கள் அமைதியாகினர். திரைப்பட துறையை ஒரு சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் மாறி இப்போது தங்களது நியாயத்தை சொல்ல இந்து அமைப்புகளும் களம் இறங்கி இருப்பதால் களம் சூடு பிடித்துள்ளது.