உத்திர பிரதேசம் மாநிலம் குறித்து கருத்து தெரிவித்து உபி செந்தில் என பட்டம் வாங்கியதுடன் நெட்டிசன்களிடம் சிக்கி சிதைந்து வருகிறார் செந்தில். இவர் பேசிய பேச்சுக்களை தொகுத்து வழங்கி நெட்டிசங்கள் வைத்து செய்து வருகின்றனர்.
தமிழக அரசு கொடுத்த பொங்கல் பொருட்கள் தரம் குறைவாக காணப்படுவதாகவும் குறிப்பாக பொங்கல் வெல்லம் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும் கடும் குற்றசாட்டு எழுந்தது இது குறித்த விவாதத்தில் பங்கேற்ற திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சரவணன் வெல்லத்தின் மெல்டிங் பாய்ண்ட் தெரியுமா என கேள்வி எழுப்பினார்? வெயிலில் வெல்லம் உறுகத்தான் செய்யும் எனவும் விளக்கம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி கடும் கிண்டலுக்கு உள்ளான நிலையில் மீம் மெட்டிரியலாக மாறியது.
சரவணனுக்கு மெல்டிங் சரவணன் என்று பெயர் கொடுக்கும் வண்ணம் அமைந்தது அந்த மெல்டிங் பாய்ண்ட், இந்த சூழலில் இதுவரை மீம் ட்ரெண்டிங்கில் இருந்த சரவணன் இப்போது தப்பிவிட்டார் அதற்கு காரணம் செந்தில் வெளியிட்ட உத்திர பிரதேசம் மாநில நிலவரம் குறித்து பேசிய வீடியோ காட்சிகள், அதாவது உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என சத்தியம் செய்துள்ளார் செந்தில் இந்த வீடியோவை நெட்டிசன்கள் கடுமையாக கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
யாரோ ஒரு நபர் செந்தில் போன்று பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சி மீம் மெட்டிரியலாக மாறிய நிலையில் இதுநாள் வரை ட்ரெண்டிங்கில் இருந்த சரவணன் தப்பித்து உத்திரம் பிரதேச செந்தில் அதாவது உபி செந்தில் சிக்கியுள்ளார். கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.