பிரபல ஊடகவியலாளர் பாண்டே தந்தி டிவியில் இருந்து வெளியேறிய பின்பு தனியாக சாணக்கியா என்ற யூடியூப் தளத்தை ஆரம்பித்தார், தொடர்ந்து தனியாக முத்திரை என்ற சினிமா சேனலையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார், மேலும் பாண்டே ஊடகவியாளர்களுக்கு என்று தனியாக பள்ளியும் நடத்தி வருகிறார்.
மேலும் பாண்டே தந்தி டிவியில் இருந்து வெளியேறிய பின்பு இதுவரை அந்த ஊடக நிர்வாகம் மீதோ அல்லது தொலைக்காட்சி மீதோ எந்தவித குற்றமும் சுமத்தியது இல்லை, மேலும் தனிப்பட்ட முறையில் எந்த சமூகத்தையும் சாதியையும் குற்றம் சுமத்தியது இல்லை தற்போது 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தாண்டி வெற்றி கரமாக சென்று கொண்டு இருக்கிறது சாணக்கியா சேனல்.
இது ஒருபுறம் என்றால் தனியார் ஊடகத்தில் இருந்து வெளியேறிய பின்பு கண்ணீர் விட்டு ஆதரவு கேட்டு தமிழ் கேள்வி என்ற யூடுப் சேனலை தொடங்கியவர் செந்தில், சேனல் தொடங்கியதில் இருந்து இப்போதுவரை ஒரு கட்சிக்கு ஆதரவாக குற்றம் சுமத்தி வீடியோ வெளியிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட சமூகத்தை தொடர்ந்து விமர்சனம் செய்தும் வந்துள்ளார்.
மேலும் பாண்டேவை நோக்கி நேரடியாக விமர்சனம் வைக்க முடியாத செந்தில் மறைமுகமாக சாணக்கியன் என அவரது யூடுப் சேனலில் விமர்சனம் செய்து வந்திருக்கிறார் இந்த சூழலில்தான் தற்போது பாண்டே வழியை பின்பற்றி தமிழ் குரல் என்ற யூடுப் சேனலை தொடங்கி இருக்கிறார் செந்தில், முந்தைய தமிழ் கேள்வி யூடுப் சேனல் போன்றே அதிக வரவேற்பு தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த செந்திலுக்கு ஏமாற்றமே முடிந்துள்ளது.
சேனலில் வெளியாகும் வீடியோக்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை, கடந்த முறை அனுதாபத்தில் சப்ஸ்கிரைப் செய்தவர்கள் இந்த முறை செந்திலின் ஒரு சார்பு நிலையை கண்டு ஒதுங்கி செல்வதாக கூறப்படுகிறது மொத்தத்தில் பாண்டே வழியை பின்பற்றிய செந்திலின் நிலை புலியை பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக மாறியுள்ளது. விரைவில் ஆதரவு அரசியல் கட்சிகள், பிரபலங்கள் ஆகியோரிடம் ஆதரவு கரம் கேட்டு செந்தில் செல்ல இருப்பதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More watch videos