Tamilnadu

முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட கடும் சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சியுடனான கூட்டணி முறிவு ?

mks and pv
mks and pv

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் சிக்கல் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் வடிவில் வந்துள்ளது, தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையில் கேரள மாநில அமைச்சர் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.


கேரள கம்யூனிஸ்ட்அரசிடம்  திமுக அரசாங்கம் உரிமைகளை இழந்துவிட்டதாகவும் மாநில உரிமையை விட்டு கொடுத்து கூட்டணியை திமுக அரசு காப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன, இந்த சூழலில் எதிர்க்கட்சியான அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனி உட்பட 5 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சி தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது, இந்த போராட்டம் தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து கொண்டு இருக்க பேரிடியாக மற்றொரு செய்தி வந்துள்ளது. கேரள அரசாங்கம் சார்பில் மரத்தை வெட்ட அனுமதி கொடுத்த ஆர்டரை நிறுத்தி வைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை  பலப்படுத்த இடையூறாக உள்ள 15  மரங்களை வெட்டுவதற்கான  உத்தரவை  PCCF மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் பென்னிசன் தாமஸ் ஆகியோர் அனுமதி அளித்தனர். இந்த உத்தரவு நகல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸிடமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன், உத்தரவு நகல் வழங்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பிய பிறகே தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.முல்லை பெரியாறு அணை பிரச்னையில் அரசு எடுத்த நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் அவசர அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அறிக்கையை பெறுவதற்கு முன்பு உத்தரவை தற்காலிகமாக  நிறுத்தி முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார்.இது தமிழக முதல்வருக்கு கிடைத்த பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கம் நம்ப வைத்து கழுத்தை அறுத்ததாக திமுக கட்சியினர் இப்போது கடும் அதிருப்தியில் உள்ளனர், இனி எதிர்கட்சிகளான அதிமுக,பாஜக, நாம்தமிழர் போன்ற கட்சிகள் நம்மை எவ்வாறு விமர்சனம் செய்ய போகிறதோ அது வருகின்ற நகர்மன்ற தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ என திமுகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனராம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் போராட்டம் தீவிரம் அடைந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் திமுக தயாராகி வருகிறதாம் இனி வரும் காலங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பாஜக அதிமுக போன்ற கட்சிகள் கையில் எடுத்து இருப்பதை பொறுத்துதான் திமுக கூட்டணியின் எதிர்காலம் இருப்பதாக கூறப்படுகிறது.