Tamilnadu

டெல்லியில் வைத்து ஒரே கேள்வி முகத்தை திருப்பிக்கொண்டு ஓட்டம் எடுத்த ஸ்டாலின்

Press meet
Press meet

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.


இதையும் படிக்க: மனநிறைவான சந்திப்பு; நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தேன்: முதல்வர் ஸ்டாலின் இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அணுகுமுறையை மத்திய அரசிடம் கடைப்பிடிக்கவுள்ளோம். 

தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். அதை மறுக்கவில்லை. அதைப் போதுமான அளவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார். இதுதவிர அவ்வப்போது தொலைபேசி வாயிலாக பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பேசுகிறோம்.

அவர்கள் அனுப்பியும் வைக்கின்றனர். அவர்களது கஷ்டங்களை அவர்கள் வெளிப்படுத்திகிறார்கள்.இருப்பினும், செங்கல்பட்டு, நீலகிரி தடுப்பூசி தயாரிப்பு மையங்களில் உற்பத்தியைத் தொடங்கினால் இதை ஓரளவு சரிசெய்ய முடியும். அந்த முயற்சியைத் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்றைய சந்திப்பிலும் அது வலியுறுத்தப்பட்டது. என்றார் அப்போது நிருபர் ஒருவர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் வெளிப்படை தன்மை இல்லை என வருகிறது.

எப்போது வெளிப்படை தன்மை இருக்கும் என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் தடுப்பூசி பற்றாக்குறையை வெளிப்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. கேட்கும் அளவுக்கு தடுப்பூசியை வழங்கினால், தடுப்பூசி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என தெரிவித்தார் ஆனால் மத்திய அரசு தடுப்பூசி குறித்த எலெக்டிரானிக் நடைமுறையை மட்டுமே வெளியில் கூற கூடாது என சொல்லியதே தவிர தடுப்பூசி குறித்து சொல்ல கூடாது என எங்கும் கூறவில்லை.

இதையடுத்து மேலும் ஒருவர் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய், முதியவர்களுக்கு 1500 ரூபாய் எப்போது கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார், இதற்கு ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் ஆகிறது படிப்படியாக நிறைவேற்றுவோம் என தெரிவித்தார் இறுதியாக தமிழக மக்கள் பலரும் எழுப்பிய கேள்வியை டெல்லியை சேர்ந்த நிருபர் எழுப்பினார் அதில் :-

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது டாஸ்மாக் மூடவேண்டும் என போராட்டம் நடத்தினீர்கள் இப்போது ஏன் திறந்தீர்கள், இப்போதும் டாஸ்மாக்கை மூட உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா? எப்போது மூடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்? இப்படி ஒரு கேள்வி வரும் என ஸ்டாலின் எதிர்பார்க்கவே இல்லை ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள எந்த பத்திரிகையாளரும் இப்படி ஒரு கேள்வியை வைக்க மாட்டார்கள்.

வைத்தவர் டெல்லியை சேர்ந்தவர், சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஸ்டாலின் வழக்கமாக சொல்லும் படிப்படியாக குறைக்கப்படும் என அதே பழைய பல்லவியை பாடினார் அடுத்த ஒரு கேள்விக்கு பதில் சொன்ன பிறகு மீண்டும் டாஸ்மாக் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் கேள்வி எழுப்ப மைக்கை வாங்கிய நிலையில் பேட்டியை முடித்து கொண்டு ஓட்டம் எடுத்தார் ஸ்டாலின்.

ஆமாம் திமுக அரசாங்கம் டாஸ்மாக் கடையை எப்போது மூடும்?