வாடகை பாக்கி, வீட்டின் உரிமையாளரை மிரட்டியது,மூங்கில் திருட்டு, போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி செக் வாங்கியது பின்பு அதே நிறுவனம் வீடியோ காட்சிகளை வெளியிட அவமானப்பட்டது, பாஜக அலுவலகத்திற்கு கேள்வி கேட்க சென்று மூக்கில் குத்து வாங்கி அவமானப்பட்டது.
என பல்வேறு குற்றசாட்டுகளுக்கு உள்ளான நபர் பியூஸ் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடக பிரபலம் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், கிஷோர் கைதை கண்டித்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டார் அந்த வீடியோவில் அண்ணாமலையை அவதூறாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த வீடியோ அண்ணாமலை கவனத்திற்கு செல்ல நேரடியாக பியூஸ் மனுஸை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினார், ஏன் இவ்வாறு அநாகரிகமாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்க, கிஷோருக்கு சப்போர்ட் செய்தால் அப்படித்தான் பேசுவேன் என குறிப்பிட்டார் அப்படியா அப்படியே பேசுங்கள் இனி உங்களுக்கு நல்லது நடக்கும் பாருங்கள் என அண்ணாமலை வெளுத்து விட்டார்.
உடனே கருத்து சுதந்திரம் பறிபோகிறது, பியுஸை மிரட்டிவிட்டார் அண்ணாமலை என ஊடகத்தில் ஒப்பாரி வைக்க தொடங்கியுள்ளார் பியூஸ், வழக்கமாக எங்காவது வருடத்திற்கு ஒரு முறை யாரிடமாவது அடி வாங்குவது அல்லது அவமானப்படுவது பியுஸிற்கு வழக்கம் இந்த ஆண்டு அது அண்ணாமலையிடம் இருக்கலாம் எனவும் விரைவில் அந்த சம்பவங்கள் அண்ணாமலை குறிப்பிட்டது போன்று பியுஸிற்கு அரங்கேறலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பியூஸ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் விரைவில் பியூஷின் உண்மை முகம் வெளிவரும் என்பது மட்டும் தற்போது தெளிவாகியுள்ளது.