Politics

யார் சொன்னது வாங்க போகலாம் அடுத்து அடுத்து அதே இடத்தில் களமிறங்கும் மோடி அமிட்ஷா!அண்ணாமலை ஹாப்பி!!!

யார் சொன்னது வாங்க  போகலாம் அடுத்து அடுத்து அதே இடத்தில் களமிறங்கும் மோடி அமிட்ஷா!அண்ணாமலை ஹாப்பி!!!
யார் சொன்னது வாங்க போகலாம் அடுத்து அடுத்து அதே இடத்தில் களமிறங்கும் மோடி அமிட்ஷா!அண்ணாமலை ஹாப்பி!!!

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது வேட்புமனு தாக்கல் முடிவடைந்து பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது, இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்ட தலைவா்கள் விரைவில் பிரசாரத்துக்காக தமிழகம் வர உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.


சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ‘திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்’ என்ற தலைப்பிலான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கையேட்டை சி.டி. ரவி வெளியிட பாஜக இணை தோ்தல் பொறுப்பாளா் வி.கே.சிங் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறியது குடியுரிமை சட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து மாநிலங்களையும், மத்திய பாஜக அரசு சமமாக நடத்துகிறது. திமுக கடந்த காலங்களில் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை நிகழ்த்தியுள்ளது. கருணாநிதிக்கு பின்னா் திமுக ஸ்டாலின் வசம், அதன் பின்னா் உதயநிதி ஸ்டாலின் வசம். திமுகவில் உட்கட்சி ஜனநாயகமும் கிடையாது என குறிப்பிட்டு பேசியிருந்தார் இந்த நிலையில் பாஜக தேர்தல் வியூகம் இரண்டு நாட்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.

பிரதமர் மோடி மதுரையில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வைக்க இருப்பதாகவும் அதே போல் மதுரை திருச்சி சென்னை ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா தமிழத்தின் உள் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக அறவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமிட்ஷா ரோடு ஷோ பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், எந்த பகுதியில் அண்ணாமலை வரக்கூடாது என கூறினார்களோ அதே பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில்  ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அண்ணாமலை மற்றும் பாஜக வேட்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், தொடர்ந்து அதிரடி பிரச்சார நடவடிக்கையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிட்ஷா அடுத்தடுத்து இறங்கி இருப்பது சட்டமன்ற பொது தேர்தலில்  பாஜக வாக்கு வங்கி மற்றும் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.