Politics

யார் இந்த செங்கற்பட்டு ஐஜேகே வேட்பாளர் முத்தமிழ் செல்வன்

யார் இந்த செங்கற்பட்டு ஐஜேகே வேட்பாளர் முத்தமிழ் செல்வன்
யார் இந்த செங்கற்பட்டு ஐஜேகே வேட்பாளர் முத்தமிழ் செல்வன்

செங்கற்பட்டு தொகுதி


ஏராளமான தொழிற்சாலைகளை உள்ளடக்கிய செங்கற்பட்டு தொகுதியில், ஐ.ஜே.கே வேட்பாளராக முத்தமிழ் செல்வன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயக கட்சியின் தொடக்க காலத்தில் கட்சியின் விளம்பரப் பிரிவு செயலாளராக பணியாற்றிய முத்தமிழ் செல்வன், 2010 ஆண்டு முதல் காஞ்சிபுரம் -செங்கற்பட்டு மாவட்ட தலைவராக பணியாற்றத் தொடங்கினார். 

கல்லூரி காலத்தில் இருந்தே முத்தமிழ் செல்வனுக்கு அரசியலின் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஏழை, எளிய மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்த முத்தமிழ் செல்வன், தமிழகத்தின் கல்வித் தந்தை  பாரிவேந்தர் ஆரம்பித்த இந்திய ஜனநாயகக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு, முழு நேரமும் அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய முத்தமிழ் செல்வன், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்துவின் வழிகாட்டுதல்படி, ஐ.ஜே.கே.வின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். 

கட்சிக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் அந்தப் பகுதிகளில் கொடிக் கம்பங்கள் நடுவது, விளம்பரங்கள் தயார் செய்வது, சமுக வலைதளங்களில் கட்சி நிகழ்ச்சிகளை பரப்புரை செய்வது எனப் பம்பரமாய் பணியாற்றிய முத்தமிழ் செல்வன், காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு ஆகிய இரண்டு மாவட்ட மக்களிடமும் நெருங்கிப் பழகி அவர்களின் நண்பதிப்பை பெற்றிருக்கிறார். அரசு அதிகாரிகள் முதல், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்வரை முத்தமிழ் செல்வனை தெரியாத ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு, இப்பகுதி மக்களின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு ஓடோடிச் சென்று உதவியதால், மக்களின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

செங்கற்பட்டு தொகுதியைப் பொறுத்த அளவில், பாதாளச் சாக்கடைத் திட்டம் தற்போது பல்லாண்டுகளாக நிறைவேற்றப்படாமல், மக்களுக்கு பெரும் துயரத்தை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. கோயம்புத்தூரில் தேவையற்ற இடங்களில்கூட மேம்பாலம் கட்டி பணத்தை செலவழித்த எடப்பாடி அதிமுக அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

ஐ.ஜே.கே சார்பில் தான் வெற்றிபெற்றால், முதல் திட்டமாக பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைந்து, கொசுத்தொல்லை இல்லாமல் மக்கள் நிம்மதியாக உறங்க முடியும் எனவும் உறுதி அளித்துள்ளார் முத்தமிழ் செல்வன். 

மும்மலை பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கு முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இங்கு குப்பைகளை எரிக்கும்போது வெளியேறும் நச்சுப் புகையால், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

செங்கற்பட்டு நகராட்சி 33 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு 3 லட்சத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், வாரத்துக்கு இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், செங்கற்பட்டு மக்களின் மிக முக்கியப் பிரச்னையாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதைப் போக்குவதற்காக, கொளவாய் ஏரி தூர் வாரப்பட்டு, ஏரி நீர் மாசுபடாமல் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு. மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளார். 

தொழிற்சாலைகள் நிறைந்த செங்கற்பட்டு மாவட்டத்தில், பல்லாவரம், தாம்பரம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கார்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு, அதன் உதிரிபாகங்கள், ஏடிஎம் இயத்திரங்கள் தயாரிப்பு, எக்ஸ்போட் நிறுனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர்களுக்கு உறுதி அளித்துள்ளார் முத்தமிழ் செல்வன். 

செங்கல்பட்டு புறவழிச் சாலை பேருந்து நிலையம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள மேம்பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி முதல் செங்கற்பட்டுவரை சாலை ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என செங்கற்பட்டு மக்கள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும் முத்தமிழ் செல்வன் உறுதியளித்துள்ளார். 

தொகுதி மக்களிடம் அதிக நெருக்கம், நற்பெயர், தொகுதிப் பிரச்னைகள் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள முத்தமிழ் செல்வன், ஐ.ஜே.கே.வின் வெற்றி வேட்பாளர் என்பதில் ஐயமில்லை.