தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அண்ணாமலை இன்று யாரும் எதிர்பாராத விதமாக மோடிஜி உத்தரவு கொடுத்து விட்டார். இனி தமிழகத்தில் பாஜக இப்படித்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து பக்தர்களையும் கோவில்களையும் பாதுகாக்க உலகளாவிய சங்கீர்த்தன ஆர்ப்பாட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசும்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து மாதம் தான் ஆகிறது. அது போல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை தொடங்கியிருக்கிறது. அதனுடைய முன்னோட்டமாக எங்கு? யார்? பெரிய அளவில் ஊழல் செய்கிறார்கள் என சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
தமிழக மின்சாரத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி அவர்களுடைய வீட்டில் பணி செய்வதற்காக ஹாஸ்டலில் வேலை செய்யும் அரசு உறுப்பினர்களை கொண்டு ஷிப்ட் போட்டு வேலை வாங்கி வருகிறார். இதெல்லாம் தெரிந்த முதல்வர் ஏன் மௌனம் காக்கிறார் என்பது பெரிய கேள்வி. 100 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனத்தில் தான் ஸ்வீட் வாங்குவேன் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அடம்பிடிக்கிறார். அதிலும் பெரிய ஊழல் மறைந்திருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "பிஜேபி யை எப்படி சமாளிப்பது தெரியும்" என பேசுகிறார். அவர் பிஜேபியை தொட்டு பார்க்கட்டுமே.. அதை தான் எதிர் பார்க்கிறோம்.எதைப் பேசினாலும் எவ்வாறு பேச வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. "மோடிஜி எங்களுக்கு உத்தரவு கொடுத்து விட்டார். இவர்களுக்கெல்லாம் மோடிஜி அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் யார்? எப்படிப்பட்டவர் என்றெல்லாம் தெரியாமல்,ஒரே ஒரு தொகுதிக்கு ராஜாவாக வலம் வருபவர்கள் தேவையில்லாமல் வார்த்தையை விடுகின்றனர். இதற்கெல்லாம் வட்டியும் அசலுமாக திருப்பி தரப்படும்.
இனிமேல் ஊழல் என்பது தமிழகத்தில் இருக்கக்கூடாது. தேசத்துக்காக நாங்கள் இருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் இருக்கிறோம். இனிமேல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்படி இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார் மோடிஜி. அவர் எப்படி இருக்க வேண்டும் என சொன்னாரோ அதன்படி நாங்கள் இருப்போம். ஊழல் எங்கு நடந்தாலும் அவர்களை தூக்கிக் கொண்டு போய் உட்கார வைப்போம் என அதிரடியாக பேசி தமிழக அரசியலையே கதிகலங்க வைத்துள்ளார் அண்ணாமலை.
ஆட்சி பொறுப்பேற்று 5 மாதம் தான் ஆகிறது. அதற்குள் இப்படி எல்லாமா நடக்கும் என வாயடைத்து நிற்கின்றனர் பொதுமக்கள். அதேவேளையில் அதிமுக என்ற கட்சி பெயரை சொல்வதைவிட இன்று யாரைக் கேட்டாலும் பாஜக என்ற ஒற்றை வார்த்தை மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையெல்லாம் வைத்து ஆராய்ந்து அலசும்போது வரும் நாட்களில் அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்