Tamilnadu

பவர் கட்டுக்கு காரணமான 20 அணில் செத்துப்போச்சு... குபீர் கிளப்பும் அண்ணாமலை!

Annamalai latest
Annamalai latest

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது என்றே சொல்லலாம். சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார் அண்ணாமலை. அதன்பிறகு, இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி எதற்கும் ஆதாரம் வேண்டும் முதலில் ஆதாரம் கொடுத்துவிட்டு பின்னர் பேசவேண்டும். அண்ணாமலைக்கு புரிதல் என்பதே கிடையாது என தெரிவித்திருந்தார். 


இதையெல்லாம் தாண்டி தற்போது ஊழல் எங்கு நடந்துள்ளது என மிகத் தெளிவாக போட்டு உடைத்துள்ளார் அண்ணாமலை. அதன்படி, மின்சார துண்டிப்புக்கு உண்மையான காரணம் என்னன்னா பிரைவேட் பவர் பர்ச்சேஸ் அக்ரிமெண்ட் மேட்டர்தான்.

தமிழகத்திலுள்ள மின்சாரத்துறை அமைச்சர் நிலக்கரி பற்றி பேசுவதற்கு எந்த ஒரு ரைட்ஸும் கிடையாது. ஏனென்றால் நிலக்கரி காண்ட்ராக்ட் கேன்சல் செய்து விட்டு, ஒப்பந்தத்தை நீடிக்காமல் இருக்கிறார்கள். பவர் பர்ச்சேஸ் செய்யவில்லை என சொன்ன அரசு இப்போது 20 ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்துள்ளதாக சொல்றாங்க. Tneb போர்டு இருப்பதே பவர் பர்ச்சேஸ் செய்வதற்காகத்தான். "தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு டிஎன்இபி போர்டு இல்லை. தமிழக மின்சார துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காக ஒரு நிறுவனம் இருக்கிறது என்றால் அது tneb தான்".

எனக்கு ரொம்ப ஆச்சரியம்.... வந்த புதுசுல அணில் மேல அப்படியே பழிய போட்டுடாங்க. இந்த அணில் அங்கு கடித்து விட்டது. அந்த ஆனால் இதை கடித்து விட்டது என்று... ஆனால் அந்த போரில், அந்த 20 அணில் செத்துப்போச்சு. இப்போது உங்களுக்கு தெரியும்...

பவர் பர்ச்சேஸ் அக்ரிமெண்ட் போடுவதற்காக இவர்கள் டிஎன்இபி போர்டை பயன்படுத்துகிறார்கள் என்று.. நிச்சயமாக தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு. அரசியலுக்காக பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள் இவர்கள் என கிழித்து தொங்கவிட்டு உள்ளார் அண்ணாமலை.