Politics

ஒரே பதிவில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த மோடி....மிரண்டு போன திமுக கூட்டணி... தலையில் கைவைத்த ஸ்டாலின்

pm modi , mkstalin
pm modi , mkstalin

பிரதமர் நரேந்திர மோடி - மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடையேயான உறவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி விஜயகாந்த் பற்றி உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வென்றது. அப்போது, பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடியே பாராட்டினார். 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2023 டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.

விஜயகாந்துக்கு அவரது மறைவுக்குப் பிறகு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.தற்போது  தமிழக அரசியல் களம் 2026 ஆம் ஆண்டை நோக்கி செல்கிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் உள்துறை அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக பாமக, தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. விஜயகாந்த் பிறந்தநாளின் போது அவருக்கு பிரதமர் அழைத்து வாழ்த்து சொல்வார். 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார்.இந்த உலகத்தின் எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்னார். நான் உங்கள் மூத்த சகோதரனைப் போல என்று மோடி சொன்னதை எனது வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன். விஜயகாந்த் - பிரதமர் மோடி நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் தனித்துவமானவர், அவரும் நானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகி, ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம். விஜயகாந்த் சமூகத்திற்குச் செய்த நன்மைக்காக தலைமுறை, தலைமுறையாக மக்கள் அவரை நினைவில் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தேமுதிகவும் அதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி இருப்பதன் மூலம் பிரேமலதாவும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக கூட்டணி கட்சிகளை கையாளுகிற பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு தரப்பிலிருந்து தேமுதிகவிடம் பேசப்பட்டிருக்கிறது.திமுக கூட்டணி இந்த நொடி வரைக்கும் மிக வலிமையாக இருக்கிறது. இதே நிலைதான் தொடரும். அதிமுகவில் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் திமுக கூட்டணிக்கு வந்து விடுங்கள்’ என்று தேமுதிக தலைமையில் உள்ள  சிலருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் குறித்தும் கேப்டன் குறித்தும் பிரேமலதா பேசியிருப்பது திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது. பிரதமர்  ட்வீட் மூலம் திமுகவின் கனவில் மண் விழுந்துள்ளது. பாஜக கூட்டணியில் தேமுதிக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள் பிரதமர் மோடியின் ரசிகர்களாக மாறியுள்ளார்கள்,