Politics

பொறுப்பேற்ற மறு நாளே தமிழக அரசிடம் அதிரடி கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!!

பொறுப்பேற்ற மறு நாளே தமிழக அரசிடம் அதிரடி கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!!
பொறுப்பேற்ற மறு நாளே தமிழக அரசிடம் அதிரடி கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில், முழு ஊரடங்கால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது


எனவே புதிய அரசு கீழ்காணும் அவசிய தேவைகளை உடனே நிறைவேற்றி தரவேண்டும்.. அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு அளிக்க வேண்டும்.,ரேஷன் கடையில் 2000 ரூபாய் போதாது ஸ்டாலின் அவர்கள் எடப்பாடியை பார்த்து ரேசனில் 5000 கொடுக்க வேண்டும் என்று ஊர் ஊராக மக்களிடம் கிராம சபை பிரச்சாரம் செய்தார்.அந்த 5000  ரூபாயை இப்பொழுது முதலைமைச்சர் ஸ்டாலின் கொடுக்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள்,திரைத்துறை,சின்னத்திரை தொழிலாளர்கள், திருமண புகைப்பட கலைஞர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக 5000 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும்

அனைத்து திருமண மண்டபங்களுக்கும் சொத்துவரி கோரோணா காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்,அனைத்து வீடுகளுக்கும்  மின்சார கட்டணம் ரத்து செய்ய வேண்டும்,  அனைத்துவிதமான வங்கி கடன் தவனைகளை கோரோணா காலத்தில் ரத்து செய்து அதை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்( ஏனெனில் முழு ஊராடங்கை அறிவித்திருப்பது ஸ்டாலின் அரசு தான்)

நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும்போது கோரோணவால் இறந்தவர்களுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்,இப்பொழுது 50 லட்சமாவது தரவேண்டும்.

கோரோணா முடியும் வரை..ரேஷன் கடையில் சர்க்கரை, சமையல் எண்ணெய்,பருப்பும் உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாக கொடுக்க வேண்டும்.,அனைத்து ரேஷன் கடைகளிலும் மாஸ்க் மற்றும் சனிடைசர் இலவசமாக கொடுக்க வேண்டும்...இவைகளை திமுக அரசு உடனடியாக செய்யும் என்று நம்புகிறோம் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக முன்பு பேசிய அனைத்து காட்சிகளும் மக்கள் மனதில் இருந்து நீங்காமல் இருப்பதால் அவர் கூறிய வார்த்தைகளை வைத்தே தற்போது அவருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.