பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார், இங்கு பாஜக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் திருநெல்வேலி தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி முடிவுகள் இருக்கும் எனவும் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் விதமாக அதிரடி மாற்றத்தை செய்துள்ளார் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியை பொறுத்தமட்டில் மொத்த வாக்காளர்கள் 2,91,156 அதில் ஆண் வாக்காளர்கள் 1,42,272 பெண் வாக்காளர்கள் 1,48,829 மூன்றாம் பாலினம் 55.
இந்த முறை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு லட்சுமணன் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார், அழகேசன் (AISMK), பா. சத்யா (நாதக), மகேஷ் கண்ணன் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். கடந்த 2016ஆம் தேர்தலில் 70.03% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களை 601 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
இந்த தொகுதி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது, 2019 நடந்த பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இங்கே வெற்றிபெற்றது. தற்போது இந்த தொகுதியில் பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது, தொடக்கத்தில் சில ஊடகங்கள் இந்த தொகுதியில் அதிமுக பாஜக இடையே ஒற்றுமை இல்லாததும், அதிமுக நிர்வாகிகள் சரியாக இவருக்கு ஆதரவாக பணியாற்றவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் தனது நேர்த்தியான அணுகுமுறையால் தற்போது தொகுதிக்குள் பாஜகவை காட்டிலும் தீவிரமாக அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், நயினார் நாகேந்திரனின் ஒட்டு மொத்த குடும்பமுமே அவருக்கு வாக்கு சேகரித்து காலையில் தொடங்கி இரவு முழுவதும் கட்சியினருடன் சேர்ந்து வலம் வருகின்றனர்.
பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்பதால் அக்கட்சியினர் கடுமையாக உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், இதனால் தற்போது தேர்தல் களத்தில் பாஜக அதிரடியாக முன்னேறி வருகிறது, பாஜக வெற்றி பெரும் தொகுதிகளில் முன்னணியில் உள்ள தொகுதி பட்டியலில் திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது.தொடர்ந்து தனக்கு எதிராக நிறுவப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி அதிரடியாக முன்னேறி வருகிறார் நயினார் நாகேந்திரன் என்பதே தற்போதைய திருநெல்வேலி கள நிலவரம்.