Politics

எதற்காக ஸ்டாலின் மருமகன் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதோ அதை கச்சிதமாக செய்து முடித்த வருமான வரித்துறை!!!

எதற்காக ஸ்டாலின் மருமகன் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதோ அதை கச்சிதமாக செய்து முடித்த வருமான வரித்துறை!!!
எதற்காக ஸ்டாலின் மருமகன் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதோ அதை கச்சிதமாக செய்து முடித்த வருமான வரித்துறை!!!

சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேர சோதனை நடத்தினர். இதையறிந்த திமுக தொண்டர்கள் நீலாங்கரை வீட்டின் முன் குவிந்தனர். இதனிடையே திமுக மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சன், என்.ஆர்.இளங்கோ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் சபரீசன் வீட்டின் அருகே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.


அதே நேரங்களில் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக், கார்த்திக் நண்பர் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த திமுக தொண்டர்கள் அண்ணா நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக், ராயனூரில் உள்ள திமுக நகரச் செயலாளர் தாரணி சரவணன் ஆகியோரின் வீடுகளிலும், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.திருவையாறு தொகுதி வேட்பாளர் துரை சந்திரசேகரனின் ஆதரவாளரும் தஞ்சை திமுக வடக்கு ஒன்றியச் செயலாளருமான முரசொலி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

பிரபல தனியார் மதுபான ஆலை உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் ஜெயமுருகன். அவரது அலுவலகத்தில் 2019ஆம் ஆண்டிலேயே ரெய்டு நடத்தப்பட்டத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்த செய்திகள் வெளியானது.

நேற்றைய தினம் பரபரப்பை உண்டாக்கிய வருமான வரி துறையினர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது 3 குழுமங்கள், தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்தலுக்கு நெருக்கமான நேரத்தில் ஸ்டாலின் மருமகன் வீட்டில் ரைடு நடத்தவேண்டிய பின்னணி என்ன என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன, ஆனால் அவை அனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டது, நேற்றைய தினம் தனது மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் வைரலாகின, அந்த வீடியோ புகைப்படங்களை பார்த்த பலரும், ஸ்டாலின் மகளுக்கு இவளோ பெரிய அரண்மனை எப்படி கிடைத்தது, யாருடைய பணம் இது என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பொதுமக்கள் மத்தியிலும் வீடா இல்லை அரண்மனையா என ஸ்டாலின் மருமகன் வீட்டை பார்த்த பலரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகி இருக்கிறது, இது தேர்தலில் ஒரு வித மாற்றத்தை உண்டாக்கலாம் என்றும் கூறப்படுகிறது, எ.வ .வேலு வீட்டில் நடத்தபட்ட வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக ஸ்டாலின் மருமகன் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதாகவும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.