Tamilnadu

புதிய ஆளுநரை ஒட்டு மொத்த திமுக கூட்டணியும் எதிர்ப்பதற்கான உண்மையான காரணம் வெளிவந்தது !

Tamilnadu
Tamilnadu

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார், அதை தொடர்ந்து ஆர். என் ரவி குறித்து பல்வேறு ஊடகங்களும், சமூக வலைத்தள பக்கங்களும் ஆர் என் ரவி குறித்த வாழ்கை வரலாற்றை கூறிவந்தனர்.


இந்நிலையில் ஆர்.என்.ரவி நியமனம் திட்டமிட்ட பாஜகவின் அரசியல் எனவும் உலவுத்துறையில் பணியாற்றிய நபரை தமிழக ஆளுநராக நியமனம் செய்து, திமுகவிற்கு அழுத்தத்தை கொடுக்க மத்திய அரசு நினைப்பதாக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், கட்சிகளை தவிர திமுக ஆதரவு அமைப்புகளும் தமிழகத்தின் புதிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அரசாங்கம் நேரடியாக புதிய ஆளுநரின் நியமனத்தை எதிர்த்தால் அது தற்போதே ,அரசியலில் மட்டுமல்லாமல் சித்தாந்த ரீதியாக மோதலை உண்டாக்க காரணமாக அமையலாம் என்பதால், தனது கூட்டணி கட்சி தலைவர்களை வைத்து புதிய ஆளுநர் நியமனத்திற்கு திமுக தலைமை எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் ஷா என்ற முன்னாள் அதிகாரியை ஆளுநராக நியமனம் செய்து திமுக ஆட்சியை அப்போதைய இந்திரா காந்தி கலைத்ததாக கூறப்படும் நிலையில் தற்போது திமுக ஆட்சி செய்யும் சூழலில் புதிய ஆளுநர் உளவு பிரிவை சேர்ந்தவராக இருப்பதால் இப்போதும் முன்பு கருணாநிதிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை போன்று நடக்க வாய்ப்பு இருக்கலாமோ என்ற பயத்தில் திமுக இருப்பதாகவும் அது ஒன்றே தற்போது ஆளுநரை எதிர்க்க காரணம் என கூறப்படுகிறது

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என திமுக கூட்டணி கட்சிகள் சொல்லிக்கொண்டே, புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைப்பது பின்னணியில் மிக பெரிய அச்சம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.