தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருளை வேறு மாநிலத்திற்கு அனுப்ப கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி பல்பு வாங்கி இருக்கிறார், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆக்ஸிசன்களை வேறு மாநிலத்திற்கு அனுப்பும் செயல் ஏற்கத்தக்கது இல்லை என பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு நான் எழுதிய கடிதம்.
கடிதத்தின் தமிழாக்கம்:
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு,வணக்கம்,தமிழகத்திற்கு வர வேண்டிய 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழக அரசின் ஆலோசனையோ ஒப்புதலோ இல்லாமல் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆக்ஸிஜன் அனுப்பப்பட்ட பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நோய் தொற்று அதிகம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தின் நிலையை பற்றி சற்றும் சிந்திக்காமல் இவ்வாறு மத்திய அரசு நடந்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி ஆகும்,
இவ்வாறு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை மத்திய அரசு நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நீட், எட்டு வழி சாலை, எரிவாயு குழாய்கள் ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசு தனது முடிவுகளை தமிழகத்தின் மீது திணித்துள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் உயிரும் முக்கியமே! இந்நிலைக்கு நாடு தள்ளப்பட்டதற்கு மத்திய அரசின் அக்கறையின்மையும் மெத்தனப்போக்குமே காரணம். பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை பிற நாடுகளுக்கு பொறுப்பில்லாமல் ஏற்றுமதி செய்ததால்தான் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம்.
இன்று ஆயிரக்கணக்கானோர் தேவையான மருந்துகள் இல்லாமல் உயிருக்கு போராடி வருகிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் மத்திய அரசு எவ்வாறு நடந்து கொள்வது அதன் பொறுப்பின்மையையே காண்பிக்கிறது. எனவே தமிழகத்திற்கு வர வேண்டிய ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவையான அளவு உடனடியாக கொள்முதல் செய்து இருப்பை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன்.
ஜோதிமணியின் கருத்திற்கு கடும் கண்டனங்களும் அதேநேரத்தில் கிண்டல்களும் உண்டாகிவருகின்றன, இந்தியா என்பது ஒரு நாடு இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு உதவிகள் மாறி மாறி கிடைக்கின்றன, தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிசன் சிலிண்டர்களை வேறு மாநிலத்திற்கு கொடுக்க கூடாது என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த MP-கள் பிரதமருக்கு கடிதம் எழுதினால் நிலவரம் எப்படி இருக்கும், ஒரு வேலை நாளை திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்தால், மனல் அல்ல சொல்லி செந்தில் பாலாஜிக்கு கடிதம் எழுதுவரா ஜோதிமணி எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.