Tamilnadu

இப்படி எந்த "அரசியல்" தலைவரும் அழைத்தது இல்லை.. ஒரே பேட்டி சோலியை முடித்த "அண்ணாமலை" ..!

Annamalai and thirumavalan
Annamalai and thirumavalan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு புயலை கிளப்பியுள்ளது, ஆர்.எஸ். பாரதி, சபரீசன், முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் என அனைவரையும் ஒரே பேட்டியில் ஆதாரங்களுடன் அதிரடி காட்டி இருக்கிறார்.


பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆர். எஸ். பாரதிக்கு நெஞ்சில் துணிவு இருந்தால் இன்னும்  6 மணி நேரம் நான் பாஜக தலைமை அலுவலகத்தில்தான் இருப்பேன் முடிந்தால் கைது செய்யட்டும், நான் அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கிய ஆதாரம் இருந்தால் அதை செய்யவேண்டும் இல்லை என்றால் ஓடி ஒளிந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் சொந்த கட்சி சின்னத்தில் நிற்க வக்கு இல்லாத இன்னொரு கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவனை மறைமுகமாக வெளுத்து எடுத்தார், அதோடு முதல்வர் மருமகன் சபரீசன் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று லூலூ தலைவரை சந்தித்ததையும் அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டார்.

மேலும் பல்வேறு விவகாரங்கள் ஆதாரம் என வெளுத்து எடுத்துவிட்டார் அண்ணாமலை அத்துடன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இனி போக போக தெரியும் ஆர் எஸ் பாரதிக்கு என மொத்தத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார் அண்ணாமலை, அண்ணாமலையின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு பல்வேறு விவாதங்களையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.

அண்ணாமலை விரிவாக கொடுத்த செய்தியாளர் சந்திப்பு இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.. சமீபத்திய தமிழக வரலாற்றில் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் வாருங்கள் கைது செய்து பாருங்கள் என எந்த அரசியல் தலைவரும் இப்படி ஓபன் சேலஞ் செய்தது இல்லை என தமிழக அரசியலை உற்று கவனித்து வரும் நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.