Cinema

"RRR" எபெக்ட் முடிவதற்குள் "இடியாய் இறங்கிய" அடுத்த அறிவிப்பு..! முழுவதும் அவர்தானாம்..!

Adipurush
Adipurush

சமீபத்தில் வெளியான RRR திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியை குவித்து வருகிறது, ஒட்டுமொத்த இந்திய அளவிலும் திரையரங்குகளை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது "RRR". இத் திரைப்படம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் எங்கும் இல்லாத அளவாக தமிழகத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தமிழகத்தை சேர்ந்த ஊடகம் ஒன்று ராமர் எவ்வாறு ஆங்கிலேயரை வீழ்த்துவார் இதற்கு ராஜமௌலி விளக்கம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நிலையில் RRR குறித்த விவாதம் தொடங்கியது இந்நிலையில் பலர் இந்த திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரம் வருவதையும் மேலும் திரைப்படத்தின் நாயகன் பூணூல் அணிந்து வருவதையும் பார்த்து கதறி வருகின்றனர்.

அதில் முக்கியமானவர் செந்தில் என்ற செந்திவேல் தற்போது "இவர்களின்" கதறலை மேலும் அதிகப்படுத்தும் வண்ணம் மற்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, RRR திரைப்படத்தில் ராமர் வேடத்தில் ராம் சரண் வருவதை பார்த்து விமர்சனம் செய்துவந்தவர்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது மற்றொரு தகவல் ஆம் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் 500 கோடி மெகா பட்ஜெட்டில் முழுக்க முழுக்க ராமர் திரைப்படம் அதிபுருஸ் என்ற பெயரில் வெளியாகிறது.

இப்படத்தை பீடவுன் இயக்குனர் ஓம் ரௌத் இயக்கியுள்ளார்.  இதில் பிரபாஸ் ராமுவாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.  இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமர் கதாபாத்திரத்தில் நடித்ததை விமர்சனம் செய்தவர்களுக்கு தற்போது முழுக்க முழுக்க ராமர் பற்றிய திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது என்ற தகவல் மிக பெரிய இடியாய் இறங்கியுள்ளது. RRR எபெக்ட் முடிவதற்குள் அடுத்த படம் பற்றிய தகவல் 'திராவிட ஸ்டாக்'  பத்திரிகை நபர்கள் மற்றும் ராமர் எதிர்ப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.