தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று மவருகிறது இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இந்த சூழலில் பாஜக ரிலீஸ் செய்த வீடியோ எந்த மாவட்டத்தில் பாதிப்பை உண்டாகியதோ இல்லையோ கோவையில் நிச்சயம் மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டம் அதிமுகவின் பலம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் கோவை மாவட்டத்திற்குத்தான் வருகை தந்தார்.
சட்டமன்றத்திலும் ''திமுக கோவை மாவட்டத்தை புறக்கணிக்கவில்லை, எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும், வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் நியமித்து நிச்சயம் அனைத்து நகராட்சியையும் கைப்பற்ற வேண்டும் என கடும் முனைப்பு காட்டி வருகிறது திமுக இந்த சூழலில் தான் பாஜக வெளியிட்டு வரும் விடியலை என்ற விளம்பரம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
திடீர் என நேற்று வைரலாகும் வீடியோவில் திமுகவினர் வாக்கு கேட்டு வர வீட்டிற்குள் அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு சாப்பாடு போடுகின்றனர், அதை சாப்பிட்ட திமுக துண்டு அணிந்தவர் முகம் சுழிக்க என்ன இதெல்லாம் நீங்கள் பொங்கலுக்கு உங்க ஆட்சியில் கொடுத்த பரிசு தொகுப்பில் சமைத்ததுதான் எப்படி இருக்கு என கேட்கின்றனர்.
இறுதியில் பாயசத்தை ஊத்துமா என பாட்டி கேட்க பலருக்கும் கருப்பாயி ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியதுதான் என்ற பட வசனமே ஞாபகத்தில் வருகிறது, இந்த விளம்பர குறும்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று இப்படி ஒரு ட்ரோல் வீடியோ யாரும் செய்தது இல்லை தரமான வீடியோ என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
More Watch Videos