ஏர்டெல் நிறுவனம் தற்போது ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். புதிய கட்டணம் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்ற நிலையில், தற்போது 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய சலுகை மற்றும் உயர்த்தப்பட்ட கட்டண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக ரூ.99 இல் இருந்து தான் திட்டம் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ரூ.49 சலுகை இருந்தது. ஆனால் தற்போது 49 ரூபாயிலான சலுகையை கிடையாது. sms வசதியுடன் ரூ.149 கு வழங்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.179 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் 1 ஜிபி டேட்டா சலுகை ரூ. 265 கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ரூ.219 கு இருந்தது. இதே போன்று ஏற்கனவே இருந்த பல திட்டங்களின கட்டணத்தை அதிகரித்து உள்ளது ஏர்டெல்.
ஏர்டெல் நிறுவனம் மட்டும் திடீரென இந்த கட்டணம் உயர்வை அதிகரித்து உள்ளதால், மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆனாலும் வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை எந்த கட்டண உயர்வு குறித்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.
பொதுவாகவே ஜியோ வருகைக்கு பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல், நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் இழுத்து முடி ஆயிற்று. மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் இழக்க கூடாது என்பதற்க்காக ஜியோ வழங்குவதை போலவே சலுகையுடன், தங்களது வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருந்தது . இந்நிலையைல் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வந்தாலும், குறைந்தபட்சம் கட்டணத்தை உயர்த்தியாவது பேலன்ஸ் செய்யலாமே என்ற முடிவில் தான் மற்ற நிறுவனங்கள் இருக்கின்றன.
அதில் முதற்கட்டமாக, தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன சேவைக்கு மாற வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.