Tamilnadu

ஓ கதை அப்படி போகுதா? ஜோதிமணியின் சித்து விளையாட்டு!

jothimani and team
jothimani and team

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் தேச விரோதிகள் அனைவரும் ஒரே புகைப்படத்தை என பத்திரிகையாளர் கார்த்திகை செல்வன், குணசேகரன், மற்றும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோரை குறிப்பிட்டு மனம் மகிழ்ந்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்ப நிகழ்ச்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள, சென்ற இடத்தில் ஜோதிமணி தனது சித்து விளையாட்டை காட்டிய சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, நாங்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என தனது அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு போட்டு இருக்கிறார் ஜோதிமணி.

குறிப்பாக பத்திரிகையாளர்கள் கார்த்திகை செல்வன், குணசேகரன் ஆகியோரையும் தேசவிரோதிகள் என சான்றிதழ் அளித்து இருக்கிறார் ஜோதிமணி, இந்திய சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தேர்தலிக் போட்டியிட்ட ஒருவர் தன்னை தேச விரோதி என குறிப்பிட்டு கொள்வது அந்த பதவிக்கு அழகு இல்லை உடனடியாக என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

அதே நேரத்தில் ரங்கராஜ் பாண்டே நடத்திய கட்டுரை போட்டி  பரிசளிப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டதை சுட்டி காட்டி பாண்டேவை சங்கி என விமர்சனம் செய்தவர்கள், ஜோதிமணி தன்னையும் தன் உடன் இருந்த இரு பத்திரிகையாளர்கள் இருவரை தேச விரோதிகள் என சொன்ன பிறகும் வாய் திறக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கார்த்திகை செல்வந்தான் நடிகர் சூர்யாவிற்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார் என கூறப்படும் நிலையில் கார்த்திகை செல்வனை சந்தித்த அடுத்த நாள் ஜோதிமணி சமூக வலைத்தளத்தில் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக பதிவிடுகிறார் அதில்.,

#ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி

#weStandwithSurya #JaiBheem

ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.

 ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது. இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது.இதை தமிழக அரசு அனுமதிக்ககூடாது.

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவேண்டும். என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது.

அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. திரு. சூர்யாவை  அச்சுறுத்துவதை  எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைபடைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ளவெண்டும். நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை என குறிப்பிட்டுள்ளார் ஜோதிமணி. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ஓ கதை எங்கே போகிறது யார் உங்களை ஆட்டிவைக்கிறார்கள் என அனைத்தும் தெளிவாக தெரிகிறது, பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என நெட்டிசன்கள் பலரும் ஜோதிமணியின் சமூக வலைத்தள. சித்து விளையாட்டுக்களை கண்டித்து வருகின்றனர்.