ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் யூடுப் சேனலான சனக்யா யூடுப் பக்கத்தில் முடக்கப்பட்டு இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் பாண்டே தனியார் ஊடகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தனியாக, தனது கருத்தை எடுத்து கூறவும், பிரபல ஊடகங்களில் விடுபட்ட செய்திகளை எடுத்து கூறவும் புதிதாக சேனக்யா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் சேனல் ஒன்றை தொடங்கினார்.
அவரது சேனல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வளர்ச்சி அடைந்து வந்தது 500k பின் தொடர்பவர்களை கடந்து 1 மில்லியன் இலக்கை நோக்கி வேகமாக வளர்ந்து வந்தது சேனக்யா , இந்தநிலையில் அதிகாலை 2 மணிக்கு சேனக்யா யூடுப் சேனல் வீடியோக்கள் ஏதும் வெளிவரவில்லை, அதே நேரத்தில் சேனக்யா சேனலும் யூடுப் பட்டியலில் இல்லை.
இந்த சூழலில் தான் சேனல் முதக்கப்பட்டத்தை சேனக்யா குழு கண்டறிந்து உள்ளது அதன் பிறகு தலைமைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது, இது குறித்து சேனக்யா தரப்பு யூடுப் சப்போர்ட் டீம்மை தொடர்பு கொண்டு உள்ளனர், இது ஹேக் செய்யப்பட்டுள்ளாதா அல்லது யூடுப் நிர்வாக குறைபாடுகள் காரணமாக தவறு ஏதேனும் நடைபெற்று உள்ளதா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் சரியாக இன்று(16/11) ரங்கராஜ் பாண்டே பிறந்தநாள் அன்றைய தினத்தில் அவரது சேனக்யா சேனல் முடக்கப்பட்டு இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது, அதோடு பாண்டே இரு நாட்கள் முன்பு தான் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து கட்டுரை போட்டி ஒன்றிணை நடத்தி அதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து சிறப்பித்தார்.
இந்த சூழலில் தான் #chanakyaahack செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் அதனை பின் தொடர்பவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, விரைவில் சேனல் திரும்ப வரும் என்று சாணக்யா தரப்பு நம்பிக்கையில் உள்ளது, இது குறித்து விரைவில் முக்கிய தகவல்கள் கிடைத்தால் TNNEWS24 DIGITAL பக்கத்தில் பதிவு செய்கிறோம். இணைந்து இருக்கவும்