நீட் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து குறித்து நடைபெற்ற விவாதம் ஒன்றில் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி மற்றும் நெறியாளர் தம்பி தமிழரசன் ஆகியோர் இடையே நடைபெற்ற விவாதம் கடும் வைரலாக பரவி கொண்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் தமிழ்மணி தெரிவித்த ஆணி தரமான கருத்துக்கள்.
தமிழக ஆளுநர் ரவி நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வாகி இருக்கிறார்கள் எனவும் குறிப்பாக 7.5% இட ஒதுக்கீடு காரணமாக தற்போது அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டைன்டன் ஆளுநருக்கு மாநில அரசு தெரிவிக்கும் கருத்துக்களை சொல்வதை தவிர அவரது சொந்த கருத்தை தெரிவிக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.
இதன் பிறகு ஆளுநர் அறிக்கை குறித்து வழக்கறிஞர் தமிழ் மணியிடம் கேள்வியை முன் வைத்தார் "தம்பி தமிழரசன்" அப்போது எந்த இடத்தில் ஆளுநர் தனது சொந்த கருத்தை சொல்ல கூடாது என எந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்ன பிரிவு என கான்ஸ்டைன்டன் சொல்லவேண்டும் என தமிழ்மணி குறிப்பிட்டார். இதற்கு நெறியாளரிடமும் பதில் இல்லை, இது ஒருபுறம் என்றால் ஆளுநர் தனது சொந்த கருத்தை சொல்வார்.
இது மட்டுமல்ல விரைவில் திமுக நீட் தேர்வையும் ஏற்று கொள்ளும், இந்தியையும் ஏற்று கொள்ளும் ஒரு உதாரணம் சொல்கிறேன், ஸ்டாலின் தனது மகளை இந்தி படிக்க வைத்து இருக்கிறார் சார் என தனியார் பள்ளி பெயரையும் குறிப்பிட்டார், அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லை என சொல்லிவந்த திமுக, இப்போது அதன் அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்று கொண்டு இருக்கிறார்கள்.
கருணாநிதி அமைச்சர் ஒருவரை நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சென்றதற்கு பின்னால் கூந்தல் எங்கே என கேட்டதாக குறிப்பிட்டார் தமிழ்மணி அப்போது இதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார் தம்பி தமிழரசன் எல்லா பத்திரிகையிலும் வந்து இருக்கிறது ஒரு லட்ச ரூபாய் பந்தயம் என அதிரடியாக குறிப்பிட்டார் தமிழ்மணி.
அப்படி குங்குமம் வைத்ததர்கே நடவடிக்கை எடுத்த திமுக, இப்போது அதன் அமைச்சர்கள் கோவில் கோவிலாக செல்கின்றனர், கடவுள் நம்பிக்கையை எப்படி இப்போது ஏற்று கொண்டு இருக்கிறார்களோ அதே போல் விரைவில் இந்தியையும் திமுக ஏற்று கொள்ளும் என ஒரே போடாக போட்டார். தமிழமணியில் இந்த கருத்திற்கு பல துணை கேள்விகளை நெறியாளர் எழுப்பியும் ஆனால் எந்த பயனும் இல்லாமல் ஆணித்தரமாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி.
விவாதம் நடைபெற்ற வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.