
திமுகவின் மூத்த தலைவராக இருப்பவர் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நீர்ப்பாசனத்துறை அமைச்சராக வும் இருந்து வருகிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது..இது திமுக அரசுக்கு இடியை இறக்கியுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த சமயத்தில் கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இடம்பெற்றிருந்தார்.
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக பலகோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002 ல் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007ல் உத்தரவிட்டது.
அதன்பிறகு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வேலுார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் துரைமுருகன் தவிர்த்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்தது இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல் முருகன், 1996-2001 ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி-யுமான கதிர் ஆனந்த்-க்குச் சொந்தமான இடங்களில் சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். காட்பாடியில் உள்ள எம்.பி கதிர் ஆனந்தின் வீடு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பணம் மற்றும் வீட்டில் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.75 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள், வீட்டிலிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் எம்.பி கதிர் ஆனந்த் தொடர்புடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கும் விரைவில் துவங்க உள்ளதால் வேலூரில் இனி திமுகவின் கோட்டை தகர்க்கப்படும் என அறிவாயா சீனியர்கள் அழுது புலம்பி வருகிறார்கள்