நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வசூல் சாதனை பெரியதாக இல்லை என்று கூறப்படுகிறது. திரை விமர்சகரோ கோடம்பாக்கத்தை பொறுத்தவரை படம் வெளியான இரண்டாவது நாளே வெற்றி விழா கொண்டாடும் கும்பல் கேப்டன் மில்லர், அயலான் படத்திற்கு ஏன் செவி சாய்க்கவில்லை என விமர்சனம் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் அடுத்த படத்தை நோக்கி சென்றுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தனுஷுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் சூப்பர்ஸ்டாரின் மகளை கல்யாணம் செய்து கொண்ட தனுஷ் திருமண வாழ்க்கை பல்வேறு காரணங்களால் விவகாரத்தில் முடிந்தது. தனுஷ் அதன் பிறகு சினிமாவில் குறிக்கோளாக இருந்தார். தற்போது தனுஷ் 51 ஆவது படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். அந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. D 51 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகை ரஷ்மிக்கா மந்தனா னைத்து வருகிறார். பட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் இன்று காலை தொடங்கியது. படப்பிடிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதால் போலீஸார் போக்குவரத்தை மாற்றினர். இதனால் திருப்பதி மலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக அப்பகுதி காவல்துறையினர் திருப்பிவிட்டுள்ளனர். ஆனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அந்த சாலையை பயன்படுத்தும் போது கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில ஊடகமும் சூழ்ந்ததால் வேறு வழி இல்லாமல் பழைய பாதையிலேயே வாகனங்களை செல்ல அப்பகுதி காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
அதேநேரம் தனுஷின் படப்பிடிப்பும் திருப்பதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். இன்னும் இரு நாட்கள் வரை திருப்பதியில் படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. பக்தர்கள் செல்லும் பகுதியில் எதற்காக படப்பிடிப்பு நடத்தி கஷ்டத்தை கொடுக்கிறீர்கள் என கேள்வி முன்வைத்து வருகிறார்கள்.