போலீஸ் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்றாக மாறியுள்ளது தந்தை பெரியார் திராவிட கழகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில் : கல்வி நிலையங்களை மதவெறி கூடாரங்களாக மாற்றும் ஆர் எஸ் எஸ் சாகா பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது தற்போது கோவை விளாங்குறிச்சி சாலையில் விஸ்வேஸ்வரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆர்எஸ்எஸ் சாகா நிகழ்வுகள் கோவை மக்களிடத்திலே அச்ச உணர்வை உருவாக்குவதுடன் மீண்டும் அமைதியற்ற கோவையாக மாறுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள். பள்ளிகளில் இதுபோன்ற வன்முறை பயிற்சிகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை 30.12.21 வியாழன் காலை 8 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.
அதாவது சமீபத்தில் பாரதியார் பல்கலைகழகத்தில் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பல்கலைக்கழகம் முன்பு துணைவேந்தரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார், இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் பெருமளவில் பங்கேற்றனர். இதற்கு போட்டியாக ஆர் எஸ் எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளியில் போராட்டம் நடத்த பெரியாரிஸ்ட்கள் கு ராமகிருட்டினன் தலைமையில் முடிவு எடுத்தனர்.
இதை அறிந்த காவல்துறை ஏதோ பெரிய அளவில் கூட்டம் கூடும் என கணித்து பள்ளி முன்பு பெரும் போலீஸ் படையை குவித்து இருந்தனர், மேலும் பாதுகாப்பு நடவடிக்கை போக்குவரத்து பாதிக்க படாமல் இருக்க மாற்று ஏற்பாடு என அனைத்தையும் திட்டமிட்டு செய்து இருந்தனர். நேரம் ஆக ஆக எந்த பெரும் கூட்டமும் தென் படவில்லை திடீர் என மதவாத ஆர் எஸ் எஸ் பயிற்சிக்கு அனுமதி கொடுக்காதே என கோஷம் மட்டும் கேட்டது , ஒரு இருபது நபர்களுக்கு உள்ளாக ஒரு கூட்டம் கையில் கொடியுடன் போராட்டம் நடத்தினர், அனைத்து கட்சி தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துவிட்டு வெறும் 20 பேர் கூடிய நிலையில் போலீசார் இதற்கா இத்தனை பந்தபஸ்து என சிரிக்காத குறையாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
குறைந்தது 500 நபர்களாவது கூடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 20 -க்கும் குறைவான நபர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் தமிழகம் பெரியார் மண் என சமூகவலைத்தளத்தில் வீரவசனம் பேசும் பெரியாரிஸ்ட் கோஷ்டிகளை வெளியில் முகம் காட்ட முடியாத நிலையை உண்டாக்கியுள்ளது.