தமிழக ஆளுநர் ரவியை இன்று ஆளுநர் மாளிகையில் சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் அலுவலகங்கள் என மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் என லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடக்கும் சம்பவங்கள் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் ஆளுநரை சந்தித்து ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம் சுமத்தலாம் என கூறப்படுகிறது.
அதே வேலையில் மிக முக்கிய சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேற இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இது குறித்து TNNEWS24 க்கு கிடைத்த தகவல்படி.. சமீபத்தில் தமிழக அரசியல் நகர்வுகளை கவனித்து வரும் டெல்லியில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் தமிழக ஆளுநரை தொடர்புகொண்டு சில விவரங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் முக்கியமாக பேசப்பட்ட விவகாரம் அமைச்சர் ஒருவர் பினாமி பெயரில் நிறுவனம் ஒன்றை வாங்கி, அதன்மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர் ஒன்றை பெற்று அதில் குறிப்பிட்ட தொகையை அதிகாரிகள் ஆகியோருக்கு ஒதுக்க இருப்பதாகவும், இந்த தகவல் குறித்த ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறார்.
இதைத்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அரசியல் ரீதியாக கொண்டு சென்று இருக்கிறார், அதன் பிறகு ஆளுநர் மூலம் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுக மத்திய அரசு நினைப்பதாகவும் அதற்கான முன்னோட்டம்தான் தமிழக ஆளுநருக்கு டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட அழைப்பு என விவரம் கிடைத்தது.தமிழகத்தில் தற்போது தேர்தல் இல்லாத நேரத்தில் எந்த வித அரசியல் செயல்பாடுகளிலும் மத்திய பாஜக ஈடுபடவில்லை .,
முழுமையாக மாநில அரசான திமுகவிற்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து வந்தது, கொரோனா தடுப்பூசி விவாகரத்திலும் தமிழக அரசின் தேவையை பூர்த்தி செய்து உள்ளது மத்திய அரசு, மேலும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவாகரங்கள் ஆகியவற்றையும் முறையாக செய்து வந்துள்ளது.GST கவுன்சிலை விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அதே கவுன்சிலில் இடம் அளித்தது பாஜக.
இவற்றின் பின்னணியில் தமிழக அரசியல் களத்தை வேறு விதமாக அணுக பாஜக திட்டமிட்ட நிலையில், கட்சியின் சார்பில் நிக்காத வேட்பாளரை பாஜக வேட்பாளர் எனவும் அவர் ஒரு ஓட்டு வாங்கினார் எனவும் வெளியான செய்தி கடும் அதிர்வலைகளை தேசிய அளவிலும் உண்டு செய்தது, விஷயம் உண்மை என்றால் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையை செய்ய மாநில தலைமைக்கு அறிவுறுத்தல்கள் சொல்லிவிட்டு தேசிய தலைமை மற்றபணியை பார்த்து இருக்கும்..,
ஆனால் போலி செய்தியாக இருந்த காரணத்தால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்து அவர்களின் எண்ணிக்கை என்ன என முழுமையான தகவலை அண்ணாமலை தேசிய தலைமைக்கு கொண்டு சென்றுள்ளார், இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஒருவர் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெற்ற தேர்தல் முடிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் என்றால் எந்த அளவு இந்த விவகாரத்தை தீவிரமாக பாஜக எடுத்து கொண்டுள்ளது என அறிந்து கொள்ளலாம், இந்நிலையில் மூன்று முக்கியமான விஷயங்கள் தமிழக பாஜக தலைமைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.பாஜகவை குறிவைத்து போலியாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது சட்டப்படி வழக்கு தொடருங்கள், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஆளுநரை சந்தியுங்கள் இதன்மூலம் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் தமிழக காவல்துறை தலைவரை அழைத்து உத்தரவு போடலாம் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஆளுநர் தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது ,ஏற்கனவே கோவில் திறப்பு விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை அதில் வெற்றி பெற்ற நிலையில் இந்த விவாகரத்திலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை டெல்லி தலைமைக்கு அதிகம் இருக்கிறதாம், அவர் ஊடகங்களை கையாலும் விவகாரமும், குறிப்பாக புள்ளி விவரங்களுடன் பதில் அளிப்பது பிரதமரை மிகவும் கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.