உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி லக்னோ சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார் இந்த புகைப்படம் நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் இடையே வரவேற்பைபெற்றுள்ளது.
உத்திர பிரதேசத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், இணையதள குற்றங்கள், தரவுகளை கையாளுதல், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் .
இக்கூட்டம் கடந்த 2014ம் ஆண்டு - குவஹாத்தி, 2015ம் ஆண்டு - கட்ச் வளைகுடா , 2016ம் ஆண்டு - ஐதராபாத் , 2017ம் ஆண்டு - டெகான்பூர் , 2018ம் ஆண்டு - கெவடியா , 2019ம் ஆண்டு - புனேவிலும் நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டம் நேரடியாக நடைபெறவில்லை.இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து புகைப்படத்தை பகிர்ந்த யோகி, அந்த புகைப்படத்திற்கு மேலே " குறிப்பிட்ட வாசகம் பின்வருமாறு :-"நாம் உறுதியுடன் புறப்பட்டோம், நமது உடல் உள்ளம் அர்ப்பணித்தோம், ஒரு சூரியனை உருவாக்கும் உறுதியுடன் , ஆகாயத்தை விட உயரம் செல்வோம்ஒரு புதிய பாரதம் உருவாக்குவோம்" எனக்குறிப்பிட்டுள்ளார், பிரதமர் மோடி முதல்வர் ஆதித்யநாத் தோளில் கைவைத்து ஆலோசனை நடத்திய புகைப்பட காட்சி எதிர் தரப்பிற்கு கலக்கக்தை உண்டு செய்துள்ளது என்றே கூறலாம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.