நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் விவாகரம் சூர்யாவை வடிவேலு வாழ்க்கையை போன்று முடக்கிவிடுமோ என்ற அச்சம் அக்குடுன்பத்தினர் மத்தியில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது,ஜெய் பீம் திரைப்படத்தில் காலண்டர் குறித்து சர்ச்சைகள் வெடித்த போதே சூர்யா அதனை வருத்தம் தெரிவித்து முடித்து இருக்கலாம் ஆனால் படைப்பு சுதந்திரம் என ஊடகவியலாளர் எழுதி கொடுத்த அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டதும்.
அன்புமணி எழுப்பிய கேள்விக்கு தங்கள் புரிதலுக்கு நன்றி என தனது செயல் சரிதான் என சூர்யா சொல்ல முயன்றதும் பாதிக்கப்பட்ட வன்னியர் தரப்பை கடும் சிக்களுக்குள் நுழைத்தது,போதாத குறைக்கு சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என சினிமா நடிகர்கள்,இயக்குனர்கள்,அரசியல் கட்சிகள் என கிளம்பியது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
தொடக்கத்தில் சூர்யா பக்கம் நின்றவர்கள் தற்போது எதிர்ப்பு அதிகரிக்க தொடங்க தொடங்க ஒருவர் ஒருவராக அவரை விட்டு திரை துறையினர் விலகி வருகின்றனர்,குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் சூர்யாவிற்கு ஆதரவாக அன்புமணிக்கு கடிதம் எழுதிய பாரதி ராஜாவை, முத்தையா முரளிதரன் படத்தை ஏன் எதிர்த்தீர்கள் அப்போது உங்கள் படைப்பு சுதந்திரம் எங்கு போச்சு என அன்புமணி கேள்வி எழுப்பியதும்..,
இனி விவாகரம் அமைதியாவது எங்கள் கைகளில் இல்லை என அன்புமணி பாரதி ராஜாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட அன்றே சூர்யா குடும்பம் கதி கலங்கிவிட்டதாம் போதாத குறைக்கு ஆளும் கட்சியை சேர்ந்த திமுக இந்த விவாகரத்தில் வாயே திறக்கவில்லை, திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் நிச்சயம் வன்னியர் அமைப்புகள் சூர்யா வீட்டினை முற்றுகை இடலாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கையை தொடர்ந்து சூர்யா வசிக்கும் சென்னை வீட்டினை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இந்த சூழலில்தான் வன்னியர் அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள ஓபிசி அமைப்புகளை திரட்டி சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிக்க வைத்தனர்.
அடுத்தது சட்ட ரீதியாக வழக்கு இப்போது ஆக்சன் என களம் இறங்கிவிட்டனர்,இனியும் அமைதியாக இருந்தால் விவாகரம் பெரிதாக உருவாகும் என தகவல் கிடைத்ததால் முதலில் நோட்டம் பார்க்க சூர்யா குடுப்பம் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் மூலம் வருத்தம் தெரிவித்து மக்களின் மனநிலை என்ன என சோதித்து பார்த்து இருக்கின்றனர் எனவும்.,
இனியும் வீரியம் தொடர்ந்தால் சூர்யாவே வருத்தம் தெரிவிக்கும் முடிவிற்கு வந்து இருப்பதாக கூறப்படுகிறது,தொடக்கத்தில் ஒரு வாரத்தில் இந்தவிவாகரம் முடிந்து விடும் என சூர்யா தரப்பு நினைத்து இருக்கிறார்கள் ஆனால், ஒரு ஊடகவியலாளர் கொடுத்த அறிவுறுத்தல்படி தொடர்ந்து சூர்யா பல்வேறு நபர்களுக்கு அறிக்கை விடுவதும் வாழ்த்து சொல்வதும் என இருக்க இப்போது சூர்யா மன்னிப்பு கேட்கவில்லையென்றால் சூர்யா குடும்பத்தின் படமே வெளியாகாது என்ற சூழல் உண்டாகி இருக்கிறதாம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.