Tamilnadu

ப்ளீஸ்.. பாஜக - வுக்கு தாவ மாட்டேன்னு சத்தியம் பண்ணு..! வேட்பாளர்களிடம் கதறும் காங்கிரஸ்!

congress
congress

தேர்தல் வந்தாலே கட்சிகள் மக்களை கையாளும் விதம் செம்ம காமெடியாகவும் சில நேரத்தில் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது கோவாவிலும் மணிப்பூரிலும் வழிபாட்டுத் தலங்களில் வைத்து வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்குகிறது காங்கிரஸ் கட்சி.


கட்சி தாவல் என்ற ஒரு விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது என்றால் அது காங்கிரஸ் கட்சி என்றே சொல்லலாம். மத்திய பிரதேசம், புதுச்சேரி, கோவா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்கள் என ஏராளமான மாநிலங்களில் ஆட்சியை அமைத்த பின்னும் எம்எல்ஏக்கள் கட்சிதாவலால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போனது. 2014ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க புதிய யோசனையைப் பின்பற்றி வருகிறது கோவா மாநில காங்கிரஸ்.


அதாவது தங்கள் வேட்பாளர்களை அவரவர் வழிப்பாட்டு தளத்துக்கு அழைத்துச் சென்று, கடவுளின் பெயரால்  உறுதிமொழி ஏற்று, வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்குகிறது காங்கிரஸ். அதாவது தேர்தலுக்குப் பிறகு கட்சித்தாவல் இருக்கக்கூடாது என கடவுளின் மீது ஆணையாக சத்தியம் வாங்கி வருகிறது. இதேபோல மணிப்பூர் மாநிலத்தில் தங்கள் வேட்பாளர்களை வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்று சத்தியம் வாங்குகின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.

காரணம்... மணிப்பூரில் 2017 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும், கடந்த 5 ஆண்டுகளில் 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அந்த பாதிப்பை தடுக்கவே சத்தியம் வாங்குவதாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் தேவ் பர்தா சிங் கூறுகிறார். இதன் மூலம் கட்சித்தாவல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால் காங்கிரஸ் எம்ஏஏக்கள் சத்தியத்தை மீறுவார்களா  என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏன்னென்றால் அதற்கான தேவை பாஜகவுக்கு ஏற்படாது என்பதே  கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.