இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை உண்டாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததார், இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் 'இந்தி திணிப்பு' விவகாரத்துக்கு எதிராக கொந்தளித்தனர்.
இந்த சூழலில் , ழகரம்’ தாங்கிய தமிழணங்கை என ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது பலரும் ஏ ஆர் ரஹ்மானை விமர்சனம் செய்து வருகின்றனர், விளம்பர நோக்கத்திற்கு ரஹ்மான் சர்ச்சையை உண்டாக்கு கிறார் அவருக்கு தமிழ் பற்று எல்லாம் இல்லை.
அவர் பெயரும் தமிழில் இல்லை, பிள்ளைகள் பெயரும் தமிழில் இல்லை ஆனால் வெற்று கோஷம் போடுகிறார், இவர் மத வெறியை கொண்டவர் அடுத்தவர் படத்தில் கூட மத வெறி பார்க்க கூடியவர் என கூறிய சம்யுக்தா என்பவர் கவிஞர் வாலி அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
நியூ படத்தில் காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தெய்வம் அம்மா என்றே வரிகளை எழுதி இருந்தேன், இறுதி நாளை ரஹ்மான் போன் செய்து தெய்வம் என கூறுவது எங்கள் மதத்திற்கு எதிரானது வேறு வரியை மாற்ற முடியுமா என கேட்டார், என்னையா இதெல்லாம் ஒரு பிரச்சனை என கூறுகிறாய், சரி தெய்வம் என்பதற்கு பதிலாக தேவதை என வைத்து கொள் எனக்குறிப்பிட்டேன்.
இதை மேற்கோள் காட்டி பாடல் வரிகளில் தெய்வம் என்ற வார்த்தை இடம்பெற்றதை மாற்றிய ரஹ்மான், தமிழை காப்பாற்ற போகிறாரா எல்லாம் வேஷம் என கடுமையான பதிலடியை கொடுத்து வருகின்றனர்.
மேலும் ஒருவர் ரஹ்மானை பிறகு ஏன் நீங்கள் இந்தி மொழி படத்திற்கு அதிகமாக இசை அமைக்கிறீர்கள். இந்திய அளவில் பிரபலமடைய இந்தி மொழியை பயன்படுத்திக் கொண்டீர்கள். இந்தியை நேரடியாக எதிர்த்தால் வெளிப்படையாக உங்கள் குரலை எழுப்புங்கள்” என குறிப்பிட்டுள்ளார்
சந்திரமவுலி என்பவர் “தமிழிலிருந்து அரபு மொழியில் தனது பெயரை மாற்றிக் கொண்டவர். ஆனால், இப்போது தமிழர் என தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் " எல்லாம் வேஷம் என கடுமையாக சாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.